Friday 27 January, 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 2(நிறைவு)

ஓடிக்கிட்டே ஊசியில நூல் கோக்குறாங்க!

நாங்கலாம் வுட்டா ஒலிம்பிக்கிலே ஓடுவோம்!!


இவங்க எதுக்கு இப்படி நிக்கிறாங்க?? அப்டியே போய் அடுத்த போட்டோவ பாருங்க!!

பாட்டில் தண்ணி நிறைக்கிறாங்க!!

இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா..




மியுசிக் சேர்



விடாத இழு அவ்ளோதான்..





ஒரு பிஸ்கட் சாப்பிட இவ்ளோ கஷ்டபடனுமா?



எங்கோ படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டி கதை – 2


குதிரையில் பயணம் செய்த படைத்தளபதி ஒருவன் தன் வழியில் குறுக்கிட்ட ஆற்றை கடக்க நினைத்தான். ஆனால் அவனுக்கு ஆற்றின் ஆழம் தெரியாததால் அக்கம்பக்கத்தில் யாராவது தென்படுகிரார்களா என்று பார்த்தான்.

அங்கே ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான். சிறுவனிடம் குதிரையில் ஆற்றை கடக்க முடியுமா என்று வினவினான். குதிரையின் உயரத்தை பார்த்த சிறுவன் கடக்கலாம் என்றான்.

சற்று தூரம் சென்ற தளபதி ஆழம் அதிகம் என்பதை உணர்ந்த தளபதி மீண்டும் கரைக்கு வர சிரமப்படவேண்டியிருந்தது. தப்பி வந்த தளபதி சிறுவனை பார்த்து கடுங்கோபத்துடன் ஏன் பொய் சொன்னாய் என்று கேட்டான்.

சிறுவன் “உங்கள் குதிரையை விட சிறிய கால்களுடைய வாத்துகள் எளிதில் ஆற்றை கடப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான்.

21 comments:

ad said...

புகைப்படங்கள் மிகமிக அருமை.

இவ்வாறான சந்தோஷங்களெல்லாம் கிராமப்புறங்களிலேயே சாத்தியம்.நகரங்களில் போலி நாகரீகங்கள்-பக்கத்து வீட்டுக்கு செல்வதையே நாகரீகக்குறைவாகக் கருதுகிறார்கள்.

புகைப்படங்களைப்பார்க்கும்போது பாதி சந்தோஷமாகவும், மற்றுமொரு பாதி கவலையாகவும் இருக்கிறது- எங்கள் சந்தோஷங்களை இழந்துவிட்டோமே என்று.

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் பதிவு...இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா..

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

நாங்களும் சாக்கோட்டம் (சாக்கு ஓட்டம்), கயிற்றில் கட்டிய பணிஸ் (பன்னு) தின்னல் மாதிரியான விளையாட்டுக்களில் சின்ன வயதில் ஈடுபட்டதுண்டு. ஆனால் நாங்கள் வருடப்பிறப்பிற்குத்தான் (சித்திரை மாதம்) இவற்றைச் செய்தோம்.

குடிமகன் said...

// Rathnavel said...
அருமை...//
வருகைக்கு நன்றி!!

குடிமகன் said...

// சுவடுகள் said...
புகைப்படங்கள் மிகமிக அருமை.

இவ்வாறான சந்தோஷங்களெல்லாம் கிராமப்புறங்களிலேயே சாத்தியம்.நகரங்களில் போலி நாகரீகங்கள்-பக்கத்து வீட்டுக்கு செல்வதையே நாகரீகக்குறைவாகக் கருதுகிறார்கள்.

புகைப்படங்களைப்பார்க்கும்போது பாதி சந்தோஷமாகவும், மற்றுமொரு பாதி கவலையாகவும் இருக்கிறது- எங்கள் சந்தோஷங்களை இழந்துவிட்டோமே என்று.
//
ஆம். நீங்கள் சொல்வது உண்மைதான்.. வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும், உங்களின் கருத்துக்களும் மிகவும் அருமை ! உண்மையான பொங்கல் இது தான் ! அந்த சந்தோசமே தனி ! நன்றி நண்பரே !

Unknown said...

படங்கள் அருமை கதை துணுக்கும் அருமை!

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
சிறுவயதில் விளையாடிய பொங்கல் விளையாட்டுக்கள் எல்லாம்
அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்...
சடுகுடு விளையாட்டும், உரியடித்தலும் சேர்த்திருந்தால்
இன்னும் அருமையாக இருந்திருக்கும்...

பசுமையான நினைவுகளுக்கும்...
எம் கிராமத்து மக்களின் புன்சிரிப்பை
காண வைத்தமைக்கும் மன மகிழ்வான நன்றிகள் பல...

குடிமகன் said...

// இராஜராஜேஸ்வரி said...
இந்தப் பதிவு...இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா.. //

பதிவுகள கூட ஒலிம்பிக்கில சேத்துகுராங்களா.. அப்படினா டவ் கெமிக்கல்ஸ ஒலிம்பிக்க விட்டு நீக்கினாதான் இந்த பதிவ இணைக்க சம்மதம் தருவேன்.. ஹி..ஹி..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி..

குடிமகன் said...

// எஸ் சக்திவேல் said...
நாங்களும் சாக்கோட்டம் (சாக்கு ஓட்டம்), கயிற்றில் கட்டிய பணிஸ் (பன்னு) தின்னல் மாதிரியான விளையாட்டுக்களில் சின்ன வயதில் ஈடுபட்டதுண்டு. ஆனால் நாங்கள் வருடப்பிறப்பிற்குத்தான் (சித்திரை மாதம்) இவற்றைச் செய்தோம்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்திவேல்... இங்கு சித்திரை ஒன்றுக்கு.. விரதமிருப்பது, கோவில்களுக்கு செல்லுதல் மட்டும்தான் நடக்கும்..

குடிமகன் said...

// திண்டுக்கல் தனபாலன் said...
படங்களும், உங்களின் கருத்துக்களும் மிகவும் அருமை ! உண்மையான பொங்கல் இது தான் ! அந்த சந்தோசமே தனி ! நன்றி நண்பரே ! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!!

குடிமகன் said...

//
புலவர் சா இராமாநுசம் said...
படங்கள் அருமை கதை துணுக்கும் அருமை!

புலவர் சா இராமாநுசம் //

ஐயா வணக்கம்.. தங்கள் வருகைக்கு நன்றி

குடிமகன் said...

//
மகேந்திரன் said...
அன்பு நண்பரே,
சிறுவயதில் விளையாடிய பொங்கல் விளையாட்டுக்கள் எல்லாம்
அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்...
சடுகுடு விளையாட்டும், உரியடித்தலும் சேர்த்திருந்தால்
இன்னும் அருமையாக இருந்திருக்கும்...

பசுமையான நினைவுகளுக்கும்...
எம் கிராமத்து மக்களின் புன்சிரிப்பை
காண வைத்தமைக்கும் மன மகிழ்வான நன்றிகள் பல...
//

வணக்கம் மகேந்திரன்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சடுகுடு அன்று நடைபெறவில்லை..
உரியடித்தல்- நடைபெறுவதற்கு முன் கேமராவில் பேட்டரி தீர்ந்துவிட்டது..

G.M Balasubramaniam said...

இந்த மாதிரி பொங்கல் கொண்டாடக் கொடுத்து வைக்க வேண்டும். இங்கெல்லாம் இந்த இடியட் பெட்டியின் முன் உட்கார்ந்து நடிகர்களையும் நடிகைகளையும் பார்த்து பண்டிகைகளே களை யிழந்து விட்டது. குட்டிக் கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

குடிமகன் said...

// G.M Balasubramaniam said...
இந்த மாதிரி பொங்கல் கொண்டாடக் கொடுத்து வைக்க வேண்டும். இங்கெல்லாம் இந்த இடியட் பெட்டியின் முன் உட்கார்ந்து நடிகர்களையும் நடிகைகளையும் பார்த்து பண்டிகைகளே களை யிழந்து விட்டது. குட்டிக் கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். //

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..

மாலதி said...

இந்த மாதிரி பொங்கல் கொண்டாடக் கொடுத்து வைக்க வேண்டும்படங்கள் அருமைநன்றி..

குடிமகன் said...

// மாலதி said...
இந்த மாதிரி பொங்கல் கொண்டாடக் கொடுத்து வைக்க வேண்டும்படங்கள் அருமைநன்றி.. //

நான் அப்பாகிட்ட தான் எதையும் கொடுத்து வைப்பேன்... அப்பாவுக்கு நன்றி!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி!!

vimalanperali said...

நல்ல படங்கள்,இது விளையாட்டை மட்டுமல்ல ஒற்றுமையையும் சொல்லிச்செல்கிற நல்ல விஷயம்.காணாமல் போன எத்தனையோ விஷயங்களில் விளையாட்டும் ஒன்றாய் போய்விட்டது.

குடிமகன் said...

விமலன் said...
நல்ல படங்கள்,இது விளையாட்டை மட்டுமல்ல ஒற்றுமையையும் சொல்லிச்செல்கிற நல்ல விஷயம்.காணாமல் போன எத்தனையோ விஷயங்களில் விளையாட்டும் ஒன்றாய் போய்விட்டது.
//
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. இருக்கும் கொஞ்ச நல்ல விஷயங்களையாவது பாதுகாப்போம்

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!