Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Friday, 27 January 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 2(நிறைவு)

ஓடிக்கிட்டே ஊசியில நூல் கோக்குறாங்க!

நாங்கலாம் வுட்டா ஒலிம்பிக்கிலே ஓடுவோம்!!


இவங்க எதுக்கு இப்படி நிக்கிறாங்க?? அப்டியே போய் அடுத்த போட்டோவ பாருங்க!!

பாட்டில் தண்ணி நிறைக்கிறாங்க!!

இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா..




மியுசிக் சேர்



விடாத இழு அவ்ளோதான்..





ஒரு பிஸ்கட் சாப்பிட இவ்ளோ கஷ்டபடனுமா?



எங்கோ படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டி கதை – 2


குதிரையில் பயணம் செய்த படைத்தளபதி ஒருவன் தன் வழியில் குறுக்கிட்ட ஆற்றை கடக்க நினைத்தான். ஆனால் அவனுக்கு ஆற்றின் ஆழம் தெரியாததால் அக்கம்பக்கத்தில் யாராவது தென்படுகிரார்களா என்று பார்த்தான்.

அங்கே ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான். சிறுவனிடம் குதிரையில் ஆற்றை கடக்க முடியுமா என்று வினவினான். குதிரையின் உயரத்தை பார்த்த சிறுவன் கடக்கலாம் என்றான்.

சற்று தூரம் சென்ற தளபதி ஆழம் அதிகம் என்பதை உணர்ந்த தளபதி மீண்டும் கரைக்கு வர சிரமப்படவேண்டியிருந்தது. தப்பி வந்த தளபதி சிறுவனை பார்த்து கடுங்கோபத்துடன் ஏன் பொய் சொன்னாய் என்று கேட்டான்.

சிறுவன் “உங்கள் குதிரையை விட சிறிய கால்களுடைய வாத்துகள் எளிதில் ஆற்றை கடப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான்.

Thursday, 19 January 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 1


கடைகுட்டியின் கைவண்ணம்..



தாய்மை


கரிநாளுக்கு கறியானவர்..


கடுங்குளிரிலும் பச்சதண்ணிலயே குளிக்கவிடுரிங்களே..

ஏரோட்டி நெ-1


ஏரோட்டி நெ-2- கொம்புக்கு வர்ணம் இல்லை இம்முறை.. கொம்பு சீவ தொம்பன் கிடைக்கலையாம்..

ஒழச்சி ஓடா தேஞ்சவரு.. ஓட்டாண்டி ஆனவரு..
தானேவில் தவறிப்போன கருவேப்பிலையார்..






மூணு மாசத்துக்கு ஒருக்கா போனாலும் மறக்காம பாசத்துடன் வரவேற்பார்..

திருந்திடாங்கப்பா


இன்று முதல் பதிவின் முடிவில் படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டிகதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளகிறேன்.


குட்டி கதை - 1

நிரம்ப ஏற்றிய கரும்புடன் வண்டியொன்று மேம்பாலத்தின் கிழே நின்றுகொண்டிருப்பதை கவனித்த மாடுமேய்க்கும் சிறுவன். கரும்பு எடுக்கலாம் என்று அருகே நெருங்கினான். வண்டியருகே ஐந்து பேர் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்து பிரச்சனை என்ன என்பதை அறிந்துகொண்டான்.

வண்டி பாலத்தினை கடந்து செல்லவேண்டுமானால் வண்டியின் உயரம் இரண்டு அங்குலம் குறைக்கப்படவேண்டும். அங்கிருந்தவர்கள் கரும்பை பிரித்து பாலத்தை கடந்தவுடன் ஏற்றலாமா இல்லை பத்து கிலோமீட்டர் சுற்றி வேறு வழியாக செல்லலாமா என்று தீவரமாக ஆலோசித்து கொண்டிருந்தார்கள்.

சிறுவன் அவர்கள் அருகே சென்று “நான் ஒரு யோசனை சொல்கிறேன் எனக்கு ஒரு கரும்பு தருகிறீர்களா?” என்றான்.

சொல்லு உன்னோட யோசனையை என்றார்கள். “வண்டியின் டயரில் உள்ள காற்றை குறைத்து முயற்சி செய்து பாருங்கள்” என்றான்.

சிறுவனுக்கு கரும்புடன் பாராட்டுகளும் கிடைத்தது. வண்டி பாலத்தை கடந்தது பின்பு காற்று நிரப்பப்பட்டு ஆலையை நோக்கி பயணப்பட்டது.