Friday 23 September, 2011

தந்தை பெரியாரை மதத் தலைவராக்க முயற்சியா?


நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது. பேச்சாளர்கள் அனைவரும் பிராமண எதிர்ப்பு வாசகங்களை மட்டுமே பிரதானமாக பேசினர். பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன. தி.க. வுக்கு ஒருவேளை செலக்ட்டிவ் அம்னீசியாவோ? பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புவதாக தெரிகிறது. சாதிக் கலவரமும் மதக்கலவரமும் மலிந்து கிடக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவைதானா? தமிழர்களின் பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்த என் தலைவனின் இயக்க தொண்டர்களா நீங்கள்?
இது அரசியல் இயக்கமல்ல சமூக இயக்கம் என மார் தட்டி கொள்ளும் உங்களுக்கு, கிராமத்து தலித் இன்றும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான் என தெரியாதா? அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யலாமே?  அதைவிடுத்து திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, சொற்பொழிவாற்றுவது, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம், கல்விக்கூடங்களை கொண்டு கிருத்தவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை, பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்துவிட்டது.
பெரியார், நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார். பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை நீங்கள் பரப்பவில்லை. பிராமண எதிர்ப்பையும், இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர். அந்தணர்களின் அதிகாரம் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்த அந்த காலகட்டத்தில் பெரியார் நடத்திய அந்தண எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஒருவித நியாயம் இருந்தது. எவ்விதத்திலும் பொருந்தாத இந்தகாலத்திலும் அதையே தூக்கிகொண்டு திரிவது பெரியார் தொண்டர்களுக்கு அழகல்ல. பெரியாரின் கொள்கை பரப்பு என நீங்கள் செய்யும் செய்கைகள் மூலம் மக்களுக்கு அவரின் மீதான மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்புள்ளது. உண்மை தொண்டன் இதைச் செய்வானா? நிச்சயம் மாட்டன்.


சமூக இயக்கமாக நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது. அணு மின் நிலையங்கள் வேண்டாம் என போராடலாம். தமிழக நதிகளை இணைக்க கோரி போராடலாம். உள்ளூர் எரி, குளங்களை சுத்தம் செய்யலாம். இது போன்றவற்றை செய்யும்போது நீங்கள் பெரியார் தொண்டர்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்.
ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன.

53 comments:

குடிமகன் said...

தமிழ்மணம் ப்ளீஸ்..

SURYAJEEVA said...

இந்து மதத்தில் பிற்படுத்தப் பட்டவர் என்று ஒதுக்குவதால் தான் மக்கள் இந்து மதத்தில் இருந்து மாறுகிறார்கள், ஆகையால் அவர்களுக்கு இந்த மதத்திலேயே மரியாதை கொடுத்தால் அவர்கள் மதம் மாற மாட்டார்கள் என்று வைக்கம் போராட்டத்தில் பெரியார் கூறியதாக கல்லூரி பாட புத்தகம் ஒன்றில் படித்ததாக நினைவு... உண்மையா என்று தெரியவில்லை...

குடிமகன் said...

@ Suryajeeva - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்ற வார்த்தைகளெல்லாம் இட ஒதுக்கீட்டுக்காக அரசாங்கங்கள் வரையறுத்தாக இருக்கவேண்டும்.

இந்து மதத்தில் நேரடியாக இந்த மாதிரியான பிரிவுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்து மதத்தில் தொழில் அடிப்படையில் ஜாதிகள் இருந்ததாக தெரிகிறது. வைட் காலர் வேலை பார்தவர்களெல்லாம் உயர்ந்த ஜாதி எனவும் கூலி வேலை பார்தவர்களெல்லாம் தாழ்ந்த ஜாதி எனவும் ஆகி இருக்ககூடும்..

இறைகற்பனைஇலான் said...

நண்பரே இது புளித்துப்போன விமர்சனம். குளம் சுத்த்ம் செய்யவும் ,சாலை போடவும்,வேறு ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் பார்ப்பனர்கள் பற்றி புரியாமல் இருக்கிறீர்கள். மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழியவேண்டும்,அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறவி பேதம் ஒழிக்க்ப்படும்.என்று பெரியார் சொல்லியுள்ளார். இது எல்லார்ர்க்கும் தான். திருமணத்தில் புரோகிதம் செய்யவேண்டும் என்ற பார்ப்பனர்க்குத்தான் என்ற நிலையை சுயமரியாதை உள்ள யாரும் ஏற்கமுடியுமா? இதை புரிந்துகொள்ளக்கூட அதே மக்கள் இருக்கும் போது புரிந்தவர்களின் வலி உங்களுக்குத் தெரியாது.இதுதான் ஆரிய மாயை. பார்ப்பனர்கள் யாரும் தாம் இதில் விலகிக்கொள்கிறோம் என்று கூரத்தயாராக இல்லையே. பார்ப்பன்ர் பாவம் என்ற மாயையிலிருந்து மாருங்கள் நண்பரே.

குடிமகன் said...

// இறைகற்பனைஇலான் said...
நண்பரே இது புளித்துப்போன விமர்சனம். குளம் சுத்த்ம் செய்யவும் ,சாலை போடவும்,வேறு ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் பார்ப்பனர்கள் பற்றி புரியாமல் இருக்கிறீர்கள். மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழியவேண்டும்,அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறவி பேதம் ஒழிக்க்ப்படும்.என்று பெரியார் சொல்லியுள்ளார். இது எல்லார்ர்க்கும் தான். திருமணத்தில் புரோகிதம் செய்யவேண்டும் என்ற பார்ப்பனர்க்குத்தான் என்ற நிலையை சுயமரியாதை உள்ள யாரும் ஏற்கமுடியுமா? இதை புரிந்துகொள்ளக்கூட அதே மக்கள் இருக்கும் போது புரிந்தவர்களின் வலி உங்களுக்குத் தெரியாது.இதுதான் ஆரிய மாயை. பார்ப்பனர்கள் யாரும் தாம் இதில் விலகிக்கொள்கிறோம் என்று கூரத்தயாராக இல்லையே. பார்ப்பன்ர் பாவம் என்ற மாயையிலிருந்து மாருங்கள் நண்பரே.//

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

புளித்துப்போன விமர்சனம், பார்பனர் பாவம் என்ற மாயை என்பன விமர்சனத்திற்கு பதில் அல்லவே.

மனித பேதம் ஒழியவேண்டும் – உன்னதமான நோக்கம். ஆனால் இன்று ஒரு கிராமத்தில் எல்லாரும், எல்லார் வீட்டிலும் சர்வ சாதாரணமாக உள்ளே நுழயமுடியுமா? தீண்டாமையை விடக் கொடுமை வேறொன்றுமில்லை, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதா?

நீங்கள் சொல்வதைப்போல சாலைகள் அமைக்க வேறு ஆட்கள் இருப்பதாக வைத்துகொள்வோம். தீண்டாமையை ஒழிக்க வேறுஆட்கள் இருக்கிறார்கள் எனச் சொல்வீர்களா?

பெரியார், மக்களை விழிப்படைய செய்வதற்காகவும், சுயமாக யோசியுங்கள் என்று சொல்லவும் தான் அந்த கழகத்தை தோற்றுவித்தாரா? அல்லது தனது கொள்கைகளை பரப்பவா?

மதம் ஒழிப்பு தான் மனித பேத ஒழிப்பு என்கிறீர்கள்.. இந்து மட்டுமே மதமா? இஸ்லாம், கிருத்தவதை எதிர்த்து ஏன் பிரச்சாரம் செய்யவில்லை?

SURYAJEEVA said...

இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தை விமர்சனம் செய்யவில்லையே, ஏன் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்... அந்த மதங்களில் தான் பிராமணன் இல்லையே என்று சொல்வார்களா? குடிமகன் உங்கள் கேள்வி நியாயமானது, தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது... ஆனால் தூங்கி கொண்டிருப்பவன் எழ ஆரம்பித்து விட்டால் நடிப்பவனும் எழுந்து தானே ஆகா வேண்டும்... அது வரை கேள்வி கேட்போம்.. வரும் பதில்களை சித்தாந்தங்கள் மூலமாய் சிதறடிப்போம்.. அதற்கு நிறைய நீங்களும் நானும் படிக்க வேண்டி இருக்கும்..

SURYAJEEVA said...

தீண்டதாகாதவர், கீழ் ஜாதி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை என்பது என் கோட்பாடு

வெளங்காதவன்™ said...

சிறப்பான கட்டுரை....

குடிமகன் said...

@வெளங்காதவன் - தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

முனைவர் இரா.குணசீலன் said...

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ??


கறி சமைத்த சட்டிக்குத் தெரியுமா சுவை??

ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ளாத ஆத்திகரும்
பெரியாரைப் புரிந்துகொள்ளாத நாத்திகரும்

என்னைப் பொருத்தவரை இந்த கறிசமைத்த சட்டிபோலத்தான் நண்பா..

Anonymous said...

நல்ல பதிவு
பெரியார் ஒரு பன்முக தன்மை கொண்ட மனிதர்.அவர் காலத்திற்கு அவர் கூறிய பல் விஷயங்கள் சரியானது.பெரியார் சொன்னது அனைத்தும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று கூறுவது அவரை மத தலைவராக் ஆக்கும் முயற்சி.இதைத்தானே அனைத்து மத பிரச்சாரகர்க்ளும் கூறுகின்றனர்.ஆதிக்க சாதி எதிர்ப்பு,சாதி மதம் ,மூட நம்பிக்கை அழிப்பு,பெண் விடுதலை என்று எவளவோ இருக்கும் போது பிராமணர்களை மட்டும் கிண்டலடித்து என்ன சாதிக்க முடியும்?.பெரியாரிஸ்டுகள் அவரின் சுய மரியாதை கலப்பு திருமணத்தை முன்னெடுத்தாலே அவ்ரை பின்பற்றுவதாக கூறும் தகுதி உண்டு
நன்றி

காட்டான் said...

மாப்பிள பெரியார ஏற்கனவே விஜயகாந் கடவுளாக்கி சூடமேற்றியதாக ஞாபகம்..ஹி ஹி..

எவ்வளவு பெரியார் வந்தாலும் இவங்க திருந்த மாட்டார்கள்..

தம2

குடிமகன் said...

@முனைவர்.இரா.குணசீலன் – நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@Anonymous – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்.. அடுத்தமுறை பேரோட வாங்க பாஸ்..

@காட்டான் - எவ்வளவு பெரியார் வந்தாலும் இவங்க திருந்த மாட்டார்கள்.. உண்மைதானுங்கோ.. தம வாக்களிதமைக்கு நன்றி!

சுதா SJ said...

வணக்கம் பாஸ்... எப்படி இருக்கீங்க... விடுமுறையில் போய் இப்போதான் வந்து இருக்கோம்...

பதிவு ரெம்ப தரமா இருக்கு பாஸ்.. உங்க பதிவில் தரம் என்றும் அதிகம் தானே....

குடிமகன் said...

// துஷ்யந்தன் said...
வணக்கம் பாஸ்... எப்படி இருக்கீங்க... விடுமுறையில் போய் இப்போதான் வந்து இருக்கோம்...

பதிவு ரெம்ப தரமா இருக்கு பாஸ்.. உங்க பதிவில் தரம் என்றும் அதிகம் தானே.... //

வணக்கம் துஷி.. விடுமுறை நல்ல ஒரு பிரேக் இருந்திருக்கும்.. நல்ல சக்தியோட உங்கள் பணிகளை (பதிவுகள் உட்பட) தொடங்க வாழ்த்துக்கள்!!

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்!!

Anonymous said...

நானும் சிறுவயதிலிருந்தே பெரியாரின் தொண்டன் தான், பதிவுக்கு நன்றி நண்பரே

pichaikaaran said...

ஆத்திகம் , நாத்திகம் என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் . பெரியார் இதில் அக்கறை காட்டவில்லை . மக்கள் முன்னேற்றமே அவர் குறிக்கோளாக இருந்தது . அன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கை , மனித முன்னேற்றத்துக்கு தடையாக இருந்ததால் கடவுளை எதிர்த்தார் . கடவுள் எதிர்ப்பு மட்டுமே அவர் அடையாளம் என்று மாற்றி விட்டனர் சிலர்

குடிமகன் said...

@ஆரூர் முனா செந்திலு – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@பார்வையாளன் – நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

தேவையான கட்டுரை தான் நண்பா

குடிமகன் said...

@ வைரை சதிஷ் – கருத்துக்கு நன்றி நண்பா!

Unknown said...

முழவதும் படித்தேன் தங்கள் கருத்து
அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவை
நல்ல பதிவு நண்ப!

ஓ.4

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

நல்லதோர் பதிவு வாழ்த்துக்கள்..

நம்பி said...

குடிமகன் said...
//மதம் ஒழிப்பு தான் மனித பேத ஒழிப்பு என்கிறீர்கள்.. இந்து மட்டுமே மதமா? இஸ்லாம், கிருத்தவதை எதிர்த்து ஏன் பிரச்சாரம் செய்யவில்லை? //

இந்து மதம் தான் ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துகிறது....இந்து மதம் தான் வர்ணாசிரமத்தை போதிக்கறது...இந்து மதம் தான் பெண்ண்டிமைத்தனத்தை வலியுறுத்துகிறது....இந்து மதம் தான் பெண்ணை வர்ணத்தின் கடைசியிலும் கடைசி பிரிவாக நிலைநிறுத்துகிறது.

இந்து மதம் பஞ்சமர் என்று தீண்டத்தகாதவர் என்றும் உருவாக்கி அதில் உயர்ந்தவனாக பார்ப்பனனை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது...இந்து மதம் தான் பார்ப்பனனுக்கு எதிராக எந்த ஜாதிப்பிரிவினர் குற்றம் புரிந்தாலும் அவனை கழுவில் ஏற்றி கொல்லவேண்டும் என்ற மனுதர்மத்தை உருவாக்கி பின்பற்ற சொல்கிறது......இன்னும் எத்தனை எத்தனையோ இழிவுகள் அவமரியாதைகள் எல்லாம் ஒட்டு மொத்த கிடங்காக உள்ளது. இந்தியாவுல் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பின்பற்றி வந்த மதமாக இருந்து கொண்டு, பெரும்பான்மையான பார்ப்பனன் அல்லாதாரை இழிவு படுத்திக்கொண்டிருக்கிறது.......

இது மாதிரி இறக்குமதியான மதமான கிறிஸ்துவமதத்திலோ, இஸ்லாம் மதத்திலோ இல்லை....அதாவது ஒன்றொக்கொன்று பிரிவுகள் இருக்கும....செல்வாக்குக ரீதியான பிரிவுகள்....நீ பெரியவனா, நான் பெரியவனா சண்டைகள் இருக்கும். ஆனால் இது போன்ற இழிவுகள் கிடையாது. நீ செருப்பு போட்டு நடக்ககூடாது, நீ படிக்க கூடாது....(நீ மட்டுமே கக்கூஸ் கழுவ்வேண்டும், நான் கழுவமாட்டேன்....அதற்காக உருவாக்கப்பட்ட தீண்டத்தகாத ஜாதி....) ஆலயத்தில் நுழையக் கூடாது...என்பன போன்ற அதிகபட்சமான இழிவுகள் எந்த மதத்திலும் கிடையாது. உட்பிரிவுக்கான மோதல்கள் இருக்கும்.

கிறிஸ்துவ மதம் இஸ்லாம் மதம் எல்லாம் இறக்குமதியான மதங்கள். இந்த மதங்களை இங்குள்ள பூர்விகமான மக்கள் இழிவுகளை சும்க்க முடியாமல் பிறமதத்திற்கு மாறினார்கள். இன்னும் மாறிக்கொண்டேயிருப்பார்கள். அதை தடுக்க முடியாது. அப்படித்தான் இங்கு இந்த மதங்கள் நுழைந்தது. இழிவுகளை போதிக்கும் எந்த ஒன்றையும் தூக்கி எறியலாம், காலால் போட்டு மிதிக்கலாம். அது தான் இப்போது நடக்கிறது.

பிறமதங்கள் கற்பனையை, கற்பனைக் கதைகளை கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல. வாழ்ந்த மனிதனை கொண்டு உருவாக்க்ப்பட்டவை. அவர் கூறியதை வைத்து உருவாக்க்கப்பட்டவை. புத்தர், இயேசு, முகமது நபி.....இந்து மதத்தில் அப்படி வாழ்ந்து எவருமே உருவாக்கவில்லை...? அதற்கான சான்றுகளும் இல்லை.

(உடனே சங்கராச்சாரியார்....இந்த கோஷ்டியையெல்லாம் எடுத்துக்க கூடாது...கடவுள் படங்கள்...புள்ளார், முருகன்...சிவன்...அவன்...இவன்...இதுமாதிரி கற்பனை கதாபாத்திரங்கள்...எல்லாம் பிறமதங்களில் இல்லை...குறைகள் உண்டு...ஒப்பிட்டு பார்த்தால் நிறைகள் அதிகம்)

இங்கிருந்து புதிய கொள்கையை உருவாக்கிய புத்தர் புதிய மதக்கடவுளாகிவிட்டார்....இங்கிருந்தவர்கள் இந்த இந்து மதத்தை சாடிவிட்டு சென்றது தான். புத்தர் இந்து மதத்தை வாழ்த்தியா சென்றார். அதை பின்பற்றத் தேவையேயில்லை என்று அவர் ஒரு கொள்கையை வகுத்தார். அது மதமாகிவிட்டது. (குறிப்பு; இந்தியாவை பொருத்தவரை புத்தமதம்...இன்னும் சில மதங்கள் எல்லாம் இந்து மதப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது)

இந்து மதத்தை பொருத்தவரை புத்தர் ஒரு நாத்திகர். அவர் பரப்பிய கருத்துகள் நாத்திக கருத்து. அந்த கருத்தை கேட்பவர் நரகத்துக்குத்தான் போவார்கள் என்ற அடிப்படையில் புத்தரை பிரம்மன் படைத்தான் என்று இந்து மதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவும் தலைமயிரில் பிறந்தார் என்....இதை புத்த மதம் எற்றுக் கொள்ளுமா?

இந்து மதம் பிற மதங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பிரச்சாரம் அவ்வப்போது நடைபெறுகிறது....இழிவுகள் என்று வரும்பொழுது...ஆனால் அந்த மதம் இங்குள்ளவர்களின் இழிவைத் துடைக்கின்றபோது..இழிவுகளில் இருந்து மான்ற நினைக்கும் மக்களுக்கு உடனடி தீர்வாக இருக்கும் போது, அதை தடுப்பதில்லை..(நம்பிக்கையுள்ளவனை எப்படி ஓரேயடியாக தடுப்பது).

இப்போதைக்கு முதலில் இந்த இழிவுகளில் இருந்து விடுதலை. அதுதான் நோக்கம். இங்கே நல்லாயிருந்தா அங்கே ஏன்? போகப்போறாங்க? மாத்து எல்லோத்தையும் மாத்து....நீ மாறு அப்புறம் மத்தவங்களைப் பத்தி கவலைப்படலாம்.

(இதை தான் அம்பேத்காரும் பின்பற்றினார். முட்டி முட்டி மோதிப்பார்த்துட்டு இதுங்க திருந்தாதுங்க என்று மதம் மாறிட்டார்...அவருக்கு அங்கே மரியாதை இருந்தது...மாறிட்டார்)

இது வழக்கமா ரொம்ப நாளா இந்த கருத்தையே பெரியாரிஸ்டுகளுக்கு எதிரா வைக்கப்படுகிறது. பெரியார் இருக்கும் பொழுதும் வைக்கப்பட்டது.

நம்பி said...

//பிராமண எதிர்ப்பையும், இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர்.//

இந்து மதமே பார்ப்பனனின் சொத்து, அதை உருவாக்கியவன் பார்ப்பனன். அதற்காக அவன் உருவாக்கியவைதான் புராணங்களும் இதிகாசங்களும். அதற்காக ஏற்படுத்தியவைகள் தான் இந்த வர்ணாசிரம தர்மங்கள். மனுதர்மங்கள் எல்லாம். இதை பார்ப்பனரே ஒத்துக்கொண்டுவிட்டனர்.

பதிவில் நிறைய பிழைகள் தெரிகின்றன. ஏதோ பெரியார் மட்டும் தான் இதை சாடிக்கொண்டிருக்கிறார் என்பதாக நினைத்தால் அது மிக மிகத் தவறு. எல்லாவற்றிற்கும் பெரியார் இணையத்தளத்திலேயே பதில் இருக்கிறது. இல்லையென்றால் தமிழ் ஒவியா, சங்கமித்திரன் வலைப்பதிவில் இதற்கான பதிவுகள் இருக்கிறது.

காந்தியுடன் நெருங்கிப் பழகியவரான கோபால் ராவ் ராமச்சந்திர ராவ் ஒரு தெலுங்கு பார்ப்பனர். சிறுவயதிலேயே பூணூலை அறுத்தெரிந்து பார்ப்பனீயத்தை வன்மையாக சாடி வெளியே வந்தவர்.. அவரை ஆந்திரப் பெரியார் என அவ்வூர் மக்கள் அழைப்பர் அவரும் பெரியாரை பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் சுயசரிதை இந்த தளத்தில் இருக்கிறது சென்று காணலாம். அவருடைய சுயசரிதை தமிழில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
http://atheistcentre.in/
இல்லையென்றால் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகத்தை வாங்கி படிக்கலாம். இவர் யார்? சாட்சாத் சங்கராச்சாரியருடன் இருந்த வலதுகரம் தான். அவரே எப்படி பார்ப்பன எண்ணங்களை சாடியிருக்கிறார் என்பதை அறியலாம்.

சுதந்திரம் பெரும் பொழுது ஆங்கிலேயரிடம் ஒரு கோரிக்கை நிறைவேற்றத்திற்காக மிக எதிர்பார்ப்புடன் பார்ப்பனர்கள் காத்திருந்தனர். அந்த கோரிக்கை என்ன தெரியுமா? வர்ணாசிரம தர்மத்தையும், மனுதர்மத்தையும் சட்டப்பூர்வமாக ஆக்கிவிட துடித்தனர். அதை சட்டமாக்கவிடாஈமல், சாதுரியமாக தடுத்தவர் பண்டித ஜவர்லால் நேரு. இதையெல்லாம் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் நிறைய தகவல்கள் இருக்கின்றன.

இந்து மதம் முதலில் பெத்த தாயை மதிக்கிறதா?

இந்து மதம் பெண்களை மதிக்கிறதா?

இந்து மதம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக விடுகிறதா?

இந்து மதம் உன்னுடைய தாய் மொழியில் அர்ச்சனை செய்யவிடுகிறதா?

இந்து மதம் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயை கோயில் கருவறைக்குள் அனுமதிக்கிறதா?

இந்து மதம் அனைவரையும் சமத்துவமாக நடத்துகிறதா?

ஏன்? இந்து மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள்? ஏன் இந்து மதத்தை நாடி பிறமதத்திற்கு வருவது போல் இங்கு யாரும் வருவதில்லை? இதையெல்லாம் அலசினால் எல்லா விஷயத்திற்கும் பதில் கிடைக்கும்.
தொடரும்.......1

நம்பி said...

தாயின் அசுத்தத்தில் பிறந்த நீ சுத்தமானவன்? கோயில் கருவறைக்குள் செல்லலாம். உன்னை ஈன்றெடுத்தவள் அசுத்தமானவளா? இது என்ன நியாயம்?

உன் உடலின் ஜீரண உறுப்பின் கழிவை சுமந்து கொண்டு பார்ப்பனனா நீ கருவறைக்குள் செல்லலாம் உன்னை ஈன்றெடுத்த தாயை செல்ல விடமாட்டாயா?

பார்ப்பனரல்லாதார் கட்டிய கோயிலில், கோயிலை கட்டியவனையே உள்ளே விடமாட்டாய்.

நான் தான் புனிதமானவன் என்று அந்த கோயில் கருவறைக்குள் காமலீலை பண்ணி அசுத்தம் செய்தாலும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதற்கு என்ன? மக்கள் பணம் என்ன சும்மாவா வருகிறது?

எங்கே? காஞ்சிபுரம் மச்சேசுவரக் கோயில் லிங்கத்து முன்னாடி காமலீலை நடக்கலை!

எங்கே கக்கூசில் விழுந்த பணத்தை எடுத்து கழுவிவிட்டு கோயில் அர்ச்சனை தட்டில் போட்டால் வேணம்னா சொல்லிடுவே ! தட்டில விழுற காசு எத்தனை கக்கூசில் விழுந்து வந்ததோ? என்ன சோதனை பண்ணியா வாங்கறே!? சோதனை பண்ணி உண்டியல்ல போடறே.....குற்ற செயலில் வந்த பணமாக இருந்தாலும் உண்டியலுக்குள்ளும் செல்லும். தொப்பையை ரொப்பிக்கறதுக்கும் செல்லுது.


மீன் வித்த காசு நாறாவா போகுது! அப்ப மட்டும் லஷ்மின்னு கண்ணுல ஒத்திக்கிற! சாமி முன்னாடி வைக்கிற மனுஷனை மட்டும் உள்ளே விடமாட்டேங்கறியே!

பழனி கோயில்லே போய் பார்த்தா தெரியும் எத்தனை பேர் ஊழல் பன்றாங்கன்னு! அதுவும் சாமி முன்னாடியே! எல்லாம் கோயில்லேயும் நடக்குது!


கோயில் நிர்வாகத்துக்கு செல்லுகின்ற பணம் அனைவரது பணம் கடவுள் நம்பிக்கையுடையவர், இல்லாதவர் என அனைவரது பணமும் தான் கோயிலுக்கு செல்கிறது. அங்கு பூஜை செய்பவர்களுக்கான சம்பளம் அரசு கஜானாவிலிருந்து செல்கிறது. இது அனைத்து தரப்பு மக்களின் வரிப்பணம்.

இந்த சமத்துவமற்ற மனித விரோத செயலை செய்துகொண்டிருப்பவனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க திராவிடர்கள் என்ன? மானம் கெட்டவர்களா? இல்லை வீரமில்லாதவர்களா? இல்லை வரிகட்டாதவர்களா?

(பகுத்தறிவு வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் கோயிலுக்கு செல்ல மாட்டார்களா? அவர்கள் நம்பிக்கையுடையவர்களாக இருக்கமாட்டார்களா? அவர்கள் கோயிலுக்கு பணம் செலுத்த மாட்டார்களா? ஆகையால் கேட்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது....)

இந்து மதத்தை யார்? குத்தகை எடுத்துள்ளது? பார்ப்பனன் தான். அவன் தான் அதற்கு காப்பாளனாக இருக்கிறான்.
***********************
எப்படி வந்தது இந்த இடஒதுக்கீடுகள்? தலித் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகுகிறார் என்றால் எது காரணம்? இன்று பல பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேலே வர எது காரணம்? அனைத்து இடங்களிலேயும் பரவி வருகின்றனரே (இது குறைவு தான்) இதெல்லாம் நடைபெற பெரியார் தான் காரணம். இம்மாதிரி இயக்கங்கள் தான் காரணம்.
*******************
இன்னும் நிறைய மாறவேண்டியிருக்கிறது. இன்னும் இரு குவளை முறைகள் கிராமங்களில் இருக்கின்றன. இன்னும் தீண்டாமை இருக்கிறது. இன்னும் ஜாதி ஒழியவில்லை. வெளியே சென்றால் தான் தெரியும். இன்னும்

இன்னும் ஆலய நுழைவுப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (செயதிகளிலேயே வருகிறதே...(பாப்பாபட்டி கீரிப்பட்டி கிராமங்கள் இருக்கிறதே....)

விவேகானந்தருக்கு பார்ப்பன துவேசி என்ற பட்டம் உண்டு. அவரும் பார்ப்பனரைர வன்மையாக சாடினார்.

இராமலிங்க அடிகளாரும் பார்ப்பனரை சாடினார். எதற்கு சாடினார்? என்பது பற்றியெல்லாம் இணையத்தில் உள்ளன.. அவருடைய மரணமே சந்தேக மரணம் தான். இவையெல்லாம் இணையத்தில் இருக்கின்றன.

இந்த குறிப்புகளையெல்லாம் பார்த்தால் நிச்சயம் மேலே உள்ள பதிவிற்கான விடைகள் கிடைக்கும்.

மும்பை கலவரத்தை யார் உருவாக்கியது.? பாபர்மசூதியை யார் இடித்தது? யார் ரத யாத்திரை நடத்தியது.? காந்தியை சுட்டு கொன்றது யார்?. எது காந்தியை கொன்றது? மாலேகான் குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தியது? பெஸ்ட் பேக்கரி...யார்? மும்பை தாஜ் கலவரம் யார்?

மதவாதமா? எது செய்தது...இன்னும் செய்து கொண்டிருக்கிறது. கோயில் கூடாது கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களால் ஏதாவது கலவரம் வந்ததா? எந்த கோயிலாவது இடிக்கப்பட்டதா?

மாலதி said...

வேடிக்கைக்கு உரியதான இந்த தி.க இப்போது தனது கொள்கைகளை தேடிக்கொண்டு இருக்கிறது பவம் அவர்களுக்குஇதை விட்டால் வேறு என்ன செய்ய முடியும் என எண்ணுகிறீர்கள் பெரியார் அவர்களுக்கு இதைத்தான் கற்று கொடுத்தார் வீரமணி பெரியாரின் சொத்துகளை சுருட்டி இப்படி கதை சொல்லி பிழைப்பு நடத்து வதை தவிர வேறு வேளை இருக்கவாய்ப்பு இல்லை . இடுகைக்கு பாராட்டுகள்

நம்பி said...

//பெரியாரின் சொத்துகளை சுருட்டி இப்படி கதை சொல்லி பிழைப்பு நடத்து வதை தவிர வேறு வேளை இருக்கவாய்ப்பு இல்லை . இடுகைக்கு பாராட்டுகள் //

ஹி ஹி....அது சரி நாம சொத்தை கையால கூட தொடமாட்டோம். ஆஸ்திரேலியா போனாலும் சரி, அர்ஜென்டைனா போனாலும் சரி, காசை கையாலக் கூடத் தொடமாட்டோம். அப்படியே சொத்துக்களை கரெக்டா கவர்ன்மென்டுக்கு கணக்கு காமிச்சிட்டுத்தான் மறுவேளை பார்ப்போம். அடுத்தவங்களுக்காக உழைச்சு உழைச்சு ஒடாப்போவோம். சொத்தை பிள்ளைங்களுக்கு கூட எழுதிவைக்கமாட்டோம். எல்லாத்தையும் கவர்ன்மென்ட்டுக்கே எழுதி வைச்சுட்டுத்தான் மறுவேளை பார்ப்போம்.

நாம் பணம் சம்பாதிச்சா நம்ம சொந்தக்காரங்க எல்லோரையும் பணம் சம்பாதிக்கவைச்சுட்டுதான் அடுத்த வேலையை பார்ப்போம். அப்புறம் ஏன் இங்க இவ்வளவு வறுமை இருக்குது. அது தான் தெரியலை.

ஒரு சொத்தை வாங்கினாக் கூட கரெக்டா "வெள்ளை"யிலதான் வாங்குவோம். "கருப்பு" என்ற கலரே பிடிக்காது. சொத்துன்னாலே வாந்தி தான் வரும்.

ஒரு காபி குடிச்சாக்கூட100 ரூபா டிப்ஸ் கொடுப்போம். அவ்வளவு தாராள தொண்டி.

ஹி ஹி மூட்டைத்தூக்குறவனுக்குத்தானே முதுகு வலி தெரியப்போகுது. இங்க எல்லாருமே உத்தமனுங்க! அதைவிட வெளியில இருக்கறவனுங்க மகா மகா உத்தமனுங்க!

Naattan said...

இந்து மதம் பார்பனரின் சொத்து என்று எவனுக்கும் (பார்பனர் உள்பட) சொல்ல தகுதி இல்லை. மற்ற மதங்களை போல ஒரு குறிப்பிட்ட மனிதரால் இந்து மதம் நிறுவபடவில்லை. அதன் ஒவ்வொரு வேரும் இலையும் பல உன்னத ஆத்மாகளால் படைக்க பட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்று கலாச்சாரத்தை, தனி மனித ஒழுக்கத்தை கற்பித்தது. இன்று பிழைப்புக்காக ராமனை தூற்றுபவர்கள் தனிமனித ஒழுக்கத்தை தகர்கிரர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் ஒரு குழந்தையின் அறிசுவடியே இந்து மதம் ஆரம்பிகிறது. சில சுயநலவாதிகளின் இடை செருகல்கள் இந்து மதத்தில் வந்ததை ஒப்பு கொள்கிறேன். வீட்டில் அழுக்கு சேர்ந்தால் கழுவி விடுவது தான் முறை. வீட்டையே கொளுத்துவது அல்ல.

நாத்திகர்கள் இல்லாமல் ஆத்திகம் வாழும். ஆனால் திக வினர் பிழைக்க இந்து மதம் விட்டால் வேறு வழியில்லை. இந்து மதம் தொடங்கிய காலம் முதல் எத்தனையோ நாத்திகர்களை பார்த்து விட்டது. பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் இல்லாதவனே நாத்திகம் பேசுவான். சில விதி விலக்குகள் இரு பக்கமும் உண்டு.

முஸ்லிம் மதத்தில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம், கார் ஓட்ட தடை என்று பெண்களை அடிமை படுத்த நிறைய உள்ளது. அதை பற்றி எல்லாம் பேச துணிவில்லாத பெரியாரும், திக வினரும் இந்து மதத்தை பற்றி மட்டும் பேச காரணம், நாம் இவர்களை கண்டு கொள்ள மாட்டோம். இவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்களால் இவர்களுக்கு லாபம். முஸ்லிம், கிறித்துவர்கள் பற்றி பேசினால் இவர்களின் சங்கம் மறுநாளே கலைக்கப்படும். வியாபாரம் ஆகாது.

திக வினரின் எதிரி பார்பனர்கள் மட்டுமே. அவர்களை என்ன காரணம் கொண்டு எதிர்ப்பது. ஆகவே இந்து மதம் பார்பனர்களின் சொத்தாக திக வினரால் முடிவு செய்யப்பட்டது. எங்கள் கிராமத்தில் உள்ள ஐயனாருக்கு பார்பனர் என்றால் யாரென்றே தெரியாது. எங்கள் ஊரு பூசாரி தான் பூஜை போடுவார். அவர் ஒன்றும் பார்பனர் இல்லை. சரித்திரமும் சமுதாயமும் தெரியாத திக வினருக்கு இதுவெல்லாம் எங்கே தெரிய போகுது. திராவிட முன்னேட்ற்ற கழகம் என்பதை பார்பனர் எதிர்ப்பு கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அத்துடன் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்பதையும் ராமகிருஷ்ணர்-விவேகானந்தர் வரலாறையும் படியுங்கள். அத்துடன் பெரியாரே ஒரு பிள்ளையார் கோயில் டிரஸ்டியாக கடைசி வரை இருந்தார் என்பதையும் படியுங்கள்.

மக்களுகாக போராடுகிறோம் என்றால் கடந்த தி.மு.க ஆட்சியின் போது தி.க வினர் எங்கே போயிருந்தார்கள். ?

சரியோ தவறோ, பெரியார் தன் கொள்கைகளை மக்களுக்காக படைத்தார். ஆனால் அதை திக வின் சொத்து என்று சொல்ல முடியாது. வீரமணி போன்ற பெரியார் துரோகிகளால் அது தனி சொத்தாக கொள்ளையடிக்க பட்டது. என்னை பொறுத்தவரை மகாத்மா காந்தி இல்லாத காங்கிரசும், பெரியார் இல்லாத திக வும் வேஸ்ட். பணத்துக்காக அலையும் இயக்கங்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு சாதி சாயம் பூசினர் வீரமணி. இதை கேட்டு பெரியார் ஆத்மா மறுமுறையும் இறந்திருக்கும். உண்மையான பகுத்தறிவு என்றால் கிலோ எவ்ளோ என்று கேட்பார்கள். கற்பு பற்றி குஷ்பு சொன்னது தி.க வினருக்கும் அவர்களின் குடும்பதருகும் சம்மதமா?

நம்பி said...

//மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் ஒரு குழந்தையின் அறிசுவடியே இந்து மதம் ஆரம்பிகிறது.//
மாதா, பிதா என்று முழுமுதற்கடவுளாக வந்து விட்ட பிறகு எதற்கு தெய்வம். அப்புறம் என்ன நாத்திகம். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று வந்து விட்ட பிறகு இதற்கு இந்த மத பித்தலாட்டம்.

இங்கு ஆத்திகன் என்ன? நாத்திகன் என்ன?

அவனவன் அம்மா அப்பாவை கும்பிட்டுட்டு போறான்! உனக்கென்ன வந்தது?

கடவுள் இல்லை என்று கல் கடவுளின் முன்னாடி ஆண்குறியை காட்டி காமலீலை பண்ணுகிறான். அவன் என்ன தெரியாமலா பண்ணான்? கடவுள் இருக்கு, இந்து மதம் இருக்கு சந்து மதம் இருக்கு என்று பிரச்சாரம் பண்ணிவிட்டு, எல்லாம் தெரிந்து தான் பன்னான். அவன் உருவாக்கிய கற்பனையை பற்றி அவனுக்கு தெரியாதா? என்ன?

இவன் நாத்திகனா? மற்றவர்கள் நாத்திகர்களா? நாத்திகம் ஆத்திகம் என்று ஒன்று இல்லவே இல்லை. இவனுங்க மக்களிடையே தங்களை பிரித்து கொள்வதற்காக இது மாதிரி வைத்து கொண்டார்கள். உன் கடவுளுக்கு தெரியாது. நீ உண்மையானவனா? இல்லை பெய்யானவனா? என்று (அப்படி ஒருவன் இருந்தால்?)

இவர் தான் தாய், இவர் தான் தந்தை என்று அறிமுகம் செய்து வைப்பவர்கள் யார்? தாய் தந்தையர் தான். இந்த தாய், தந்தையர் தான் பாரம்பரியமாக வந்த நம்பிக்கைகளை பிள்ளைகளுக்கு விதைப்பவர்கள். இவர்கள் கூறாமல் யாரும் எந்த மதத்தை பற்றியும் சுயமாக அறிந்து கொள்ளமுடியாது.

பெரியார் உட்பட அனைவரும் நம்பிக்கைகளில் இருந்து வெளியே வந்தவர்கள் தான். ஆகையால் எந்த ஒன்றிலிருந்து வெளியே வருவதை எவனும் தடுக்க முடியாது.

இப்போது லாஸ் எங்கே மதத்திற்கா? மனிதனுக்கா? இந்து மதத்தில் இருந்தவர்கள் தானே வெளியே வந்திருக்கிறார்கள். அப்புறம் அழிக்கவே முடியாது.....கோக்கவே முடியாது....1926 ல 30 கோடி....இப்ப 120 கோடி மக்கள் தொகைதான் பெருக்கம். இதை மதப்பெருக்கமாக அவனவன் ஆக்கிட்டா நாம என்ன பண்ண முடியும். இந்த கோடிகளில் இருந்து தான் வெளியே வர்றாங்க.

இந்து மதத்தில் இருந்தவர்கள் தானே பிற மதத்திற்கு போயிருக்கிறார்கள். எல்லாம் இந்து மதத்தை பற்றி பிரச்சாரம் பண்ண குடும்பங்கள் தானே!

நீ ஏனய்யா தப்பு செஞ்சே? என்றால் அவன் தப்பு செய்யறானே என்று புறஞ்சொல்லி காலத்தை ஒட்டுவது எதற்காக? நீ கெட்டவன் அவ்வளவுதான் கிளம்பு காத்து வரட்டும் அதான் தீர்ப்பு. அப்புறம் என்ன மதத்தை உரிமை கொண்டாடலை என்ற வாதம் உரிமை கொண்டாடலைன்னா உடனடியா உன் வீட்டு குப்பைதான் ஞாபகத்துக்கு வரணும் அடுத்தவன் வீட்டு குப்பையை பற்றி எதுக்கு ஞாபகத்துக்கு வரணும். அங்கே நடக்குது இங்கேயும் நடக்கலாம் தப்பில்லை. என்ற சின்னப்புள்ளைத்தனமான பதிலை மதவாதிங்க வைக்கிறது வழுக்கம். அநியாயம் அழிச்சாட்டியம் பன்றதெல்லாம் நீ தான்.

அவனவன் வாய் நாற்றம் அவனவனுக்கு தெரியாது. அது அடுத்தவனுக்குத் தான் தெரியும். கெட்ட காத்தை கும்பல்லே விட்டுட்டு என்னமோ எப்பவுமே கெட்டகாத்தையே இவன் விடாத மாதிரி அடுத்தவனை குற்ற உணர்வோடு பார்ப்பான். உடல் உபாதையை அடக்கமுடியலையா விடனோன்னு வந்தா போய் வெளியே போய் விட்டுட்டு வா! இது இயற்கை அவனுக்கும் வரும் எல்லோருக்கும் வரும் என்று சொல்லுவானா? நம்பளை கண்டுபிடிக்கலப்பா......அவன்தான் அழுக்கா இருக்கான் அவன் தான் பொசுக்கி விட்டிருப்பான்...என்று நழுவுகிற கூட்டம் உள்ள நாடு....இது...மனதனே ஒரு சிங்கம் இதுல இவன் சுத்தமானவன் அவன் அசுத்தமானவன் என்று பிரித்தாளுபவன் இந்த செயலையெல்லாம் செய்து கொண்டிருப்பான், இந்த கெட்ட காத்து சமாச்சாரம் உட்பட.....

தொடர்ச்சி....1

நம்பி said...

தொடர்ச்சி...1

மதத்தை உரிமை கொண்டாட முடியாது, என்று கூறிக்கொண்டே மீண்டும் மீண்டும் மதப்பிரச்சாரத்தை துவக்குபவன் எவன்? அதை ஆணித்தரமாக எல்லோரும் நம்ப வேண்டும் என்று வலியுறுத்துபவன்? எவன்? நான் நம்புவதை அனைவரும் நம்பவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான காரணம் என்ன? இதை கடவுள் செய்ய சொல்லி சொன்னாரா? அப்படி என்றால் இதை தடுக்க சொல்லி இவர்களை அனுப்பினார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ள கூடாது? நீ தானே சொன்னே அனைவரையும் படைத்தது கடவுள் என்று?

இல்லை இவனுக்கு மட்டும் தனியாக என்ன? பட்டா எதுவும் இந்திய நீதிமன்றங்கள் வழங்கியிருக்கிறதா? இல்லை பிறக்கும் போதே லைசன்ஸ் வாங்கி கொண்டு பிறந்தானா?

உச்சநீதிமன்றமே இந்து மதம் பெரும்பான்மையோர் மதம் என்று எடுத்துக்கொள்ளமுடியாது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும் முடியாது. அந்த உரிமை எவனுக்கும் இல்லை. இது ஒரு வாழ்வியல் முறை அதை தவிர இந்த இந்து மதத்தில் வேறொன்றுமில்லை என்று தீர்ப்பு கூறிவிட்ட பிறகு. எவன் கேள்வி கேட்க முடியும்? இது ஒரு மதபோதகரின் கீழ் வருபவையும் அல்ல. ஒரே மாதிரியான கொளைகயை கொண்டதும் அல்ல.

ஒவ்வொரு நிலப்பரப்பின் கலாச்சாரத்தின் படி, காலச்சூழலுக்கு ஏற்றபடி அவரவர் நம்பிக்கைபடி பின்பற்றபட்டு வந்திருக்கிறது. ஆகையால் இது அனைத்தையும் ஒரே மதம் என்ற சொல்லில் அடக்கிவிடமுடியாது. என்று தான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
//திக வினரின் எதிரி பார்பனர்கள் மட்டுமே.//
மனிதத்துக்கே எதிரி பார்ப்பனன். இணையத்தில் கூட இன்றளவுக்கும் பார்ப்பனன் வர்ணாசிரமத்தை ஆதரித்து எழுதுகிறான். தீண்டாமையை வலியுறுத்து எழுதுகிறான். மனிதகுலத்துக்கே எதிரி. அதுவும் பகுத்தறிவாளன் கண்டுபிடித்த சாதனத்தை வைத்துக்கொண்டே......

எங்கே தீட்டு பார்க்கும் பார்ப்பனன், நான் இவன் ரத்தத்தை மட்டும் தான் வாங்குவேன். என் பார்ப்பன ரத்தத்தை மட்டும் தான் என் உடலில் செலுத்திக்கொள்வேன். அதுவும் இந்த கோத்திரத்தில் பிறந்தவன் ரத்தத்தை மட்டுமே வாங்குவேன் என்று சொல்ல சொல்லுமே பார்ப்போம். அப்பவாது அந்த தீய எண்ணத்தோடு அவனும் ஒழிவான் என்று இருக்கலாம்.

(மருத்தும் பார்த்து கொண்ட பிறகு தண்ணீர் தெளித்து துடைக்கும் பார்ப்பனன் இன்றும் இருக்கிறான். அப்ப என்ன உயிர் வாழ வேண்டிக்கிடக்கிறது.)

உயிர் என்று வந்தால் மட்டும் பரிதாபமாக எவனாவது கிட்னி கொடுப்பானா? இதயம் கொடுப்பானா? அப்ப கூட அவனுடைய உறவினன் எவனும் கொடுக்கமாட்டான். மத்தவங்கதான் கொடுக்கணும். எங்கே சொல்ல சொல்லுமே பார்ப்போம்.

இவன் கிட்னியை மட்டுமே வாங்குவேன் மத்தவன் கிட்னியையும், வாங்கமாட்டேன் சட்னியையும் வாங்கமாட்டேன் என்று இரேன் பார்ப்போம். பொருந்தவில்லை என்றாலும் சாவேன் என்று தீண்டாமையோடு சாகலாமே! அப்ப மட்டும் தீட்டு தரித்திரம் எல்லாம் தெரியாது. எவன் இதயம் கொடுத்தாலும் வாங்கி சொருவிக்க வேண்டியது. சொருவிக்குணு இவனை உள்ளே விட மாட்டேன் அவனை உள்ளே விட மாட்டேன்னு சொல்ல வேண்டியது.

குடிமகன் said...

// புலவர் சா இராமாநுசம் said...
முழவதும் படித்தேன் தங்கள் கருத்து
அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவை
நல்ல பதிவு நண்ப!

ஓ.4

புலவர் சா இராமாநுசம் //
தங்களின் – கருத்துரைக்கும், வாக்கிற்கும் நன்றி ஐயா

குடிமகன் said...

// காட்டான் said...
நல்லதோர் பதிவு வாழ்த்துக்கள்.. //
வருகைக்கும் கருத்துக்கும் – மீண்டும் நன்றி

குடிமகன் said...

@நம்பி - தங்களின் வருகைக்கும் மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் நன்றிகள்!

குடிமகன் said...

@நம்பி -நீங்கள் என்னுடைய பதிவை முழுவதுமாக புரிந்து கொண்டுதான் இந்த பின்னூட்டங்களை எழுதியுள்ளீர்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது..

ஆரியனையும், இந்து என்கிற சித்தாந்தத்தையும் ஒழித்துவிட்டால், திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?

ஆரியனை அழித்துவிட்டால், கீழ் சாதி என்று கருதப்படுகிற ஒரு இளைஞனுக்கு மேல் சாதி என்று கருதப்படுகிற பெண்களை கட்டிக் கொடுக்க போட்ட போட்டி நடக்குமோ?

ஏன் இந்து மதத்தை மட்டுமே குறிவைக்கிரீர்கள் என்ற என் கேள்விக்கு, நாங்கள் வாழும் நாட்டில் இந்துத்துவம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றபடுகிறது எனவே ஒரு மிகப்பெரிய சமூக பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறோம் என்று சொல்லியிருந்தால் உங்களுடைய சமூக பொறுப்பு பாராட்ட தக்கதாக இருந்திருக்கும்.. அனால் அதை விடுத்து, இந்து மதம் மட்டுமே இழிவை சுமந்து வருகிறது, ஏனைய மதங்கள் அனைத்தும் நல்ல மதங்கள் என்பதைப்போன்ற உங்களுடைய பதில், நீங்கள் மெனக்கட்டு எழுதிய கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சியை தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை..

உங்களுடைய விளக்கங்களுக்கு என்னுடைய தர்க்கரீதியான மறுவிளக்கங்கள்.. இதனை இந்துமதத்திற்கு நான் வாங்கும் வக்காலத்து என எண்ணக்கூடாது..

பெண்ணடிமைத்தனத்தை இந்து மதத்தில் மட்டுமே காணமுடிகிறது என்கிற உங்கள் கருத்து ஏற்புடையதல்ல, இஸ்லாம் மதத்தில் இன்றும் பெண்கள் எப்படி வாழ்கின்றனர் என்பது எல்லாருக்கும் தெரியும்.. சமீபத்தில் தான் ஒரு அரபுநாடு பெண்ணுக்கு வாக்குரிமையையே அளித்து, மேற்கத்திய நாடுகளில் கூட நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமல்தான் இருந்தது, மேற்கத்திய நாடுகளிலும் பெண்ணுரிமைக்காக எவ்வளவோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன...

வெள்ளையர்கள் கறுப்பர்களுக்கு செய்த இழிவுகள் உங்களுக்கு தெரியாதா? இதற்கும் நம்மூர் தீண்டாமை கொடுமைக்கும் வித்தியாசம் ஏதும் எனக்கு தெரியவில்லை.. இவையெல்லாம் மனிதனின் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுகளே தவிர இதற்கும் மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே என் கருத்து..

கருதுச்சண்டையை மேலும் நான் தொடர விரும்பவில்லை... இதனால் எந்த பயனும் யாருக்குமில்லை..

உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு அதேபோல் எனக்கும்

குடிமகன் said...

@ மாலதி - வருகைக்கும் கருத்துக்கும் – மீண்டும் வருக!

குடிமகன் said...

@ Naattan – வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி!

//பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் இல்லாதவனே நாத்திகம் பேசுவான். சில விதி விலக்குகள் இரு பக்கமும் உண்டு.//

இது எனக்கு விளங்கவில்லை.. புரியும்படி உதாரணங்களுடன் விளக்கவும்... மேலும் இப்படிப்பட்ட கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

நம்பி said...

குடிமகன் said...
//@நம்பி -நீங்கள் என்னுடைய பதிவை முழுவதுமாக புரிந்து கொண்டுதான் இந்த பின்னூட்டங்களை எழுதியுள்ளீர்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது..//

பின்னூட்டத்தை சரியாக பார்க்கவில்லை போல இருக்குதே...திருப்பி அதே கேள்வி வந்திருக்குதே.....!
குடிமகன் said...
//ஏன் இந்து மதத்தை மட்டுமே குறிவைக்கிரீர்கள் என்ற என் கேள்விக்கு, நாங்கள் வாழும் நாட்டில் இந்துத்துவம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றபடுகிறது எனவே ஒரு மிகப்பெரிய சமூக பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறோம் என்று சொல்லியிருந்தால் //

அப்படியே வைக்கிறேன்....
//இந்து மதம் தான் ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துகிறது....இந்து மதம் தான் வர்ணாசிரமத்தை போதிக்கறது...இந்து மதம் தான் பெண்ண்டிமைத்தனத்தை வலியுறுத்துகிறது....இந்து மதம் தான் பெண்ணை வர்ணத்தின் கடைசியிலும் கடைசி பிரிவாக நிலைநிறுத்துகிறது........................
.............................................................
குடிமகன் said....
//ஏனைய மதங்கள் அனைத்தும் நல்ல மதங்கள் என்பதைப்போன்ற உங்களுடைய பதில், நீங்கள் மெனக்கட்டு எழுதிய கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சியை தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை..//
.............................................................
எல்லாம் பிறமதங்களில் இல்லை...குறைகள் உண்டு...ஒப்பிட்டு பார்த்தால் நிறைகள் அதிகம்)
............................................................
...................................................
//பிரச்சாரம் அவ்வப்போது நடைபெறுகிறது....இழிவுகள் என்று வரும்பொழுது...ஆனால் அந்த மதம் இங்குள்ளவர்களின் இழிவைத் துடைக்கின்றபோது..இழிவுகளில் இருந்து மாற நினைக்கும் மக்களுக்கு உடனடி தீர்வாக இருக்கும் போது, அதை தடுப்பதில்லை..(நம்பிக்கையுள்ளவனை எப்படி ஓரேயடியாக தடுப்பது).//

இந்த மதத்தை விட அது பெட்டரா இருக்குதுன்னு தானே அங்கே போறான். இங்கே பெட்டரா இருந்தா இங்கே வரப்போறான்..(அப்படி இங்கே வந்தாலும் இந்த "சந்து" " "பொந்து" மதம் சேர்ப்பதில்லை...எல்லாம் கோயில் கொடி மரம் வரைக்கும் தான்....அதுக்கு மேல நாட் அலவுட்...எல்லாம் தான் அங்கே வைக்கப்பட்டிருக்குதே...எங்கே நல்ல மதம் கெட்ட மதம் என்று வைத்திருக்கிறேன்....மதமே இல்லைன்னு வந்துட்டப்பிறகு....எப்படி இந்த கருத்தை வைப்போம். நீங்க அப்படி புறிஞ்சிக்கிறீங்க....

இங்கே இல்லாதது அங்கேயிருந்தா பாராட்டித்தானே ஆவனும்.....

எல்லாம் பின்னூட்டத்திலேயே இருக்குது....அப்புறம் கேள்வி கேட்டா எப்படி......

இங்கே இந்து மதம் பெரும்பான்மை மதம் இல்லை என்பதற்கு தீர்ப்பும் வைத்து சுட்டிக்காட்டியிருக்கிறேன்....காரணம் என்ன என்று நீதிபதி சுட்டிகாட்டியுள்ளவற்றின் ஒரு பகுதியையும் வைத்திருக்கிறேன்.......அப்புறம் கேள்வி கேட்டால் எப்படி....?
நீங்க கேட்ட கேள்வி அனைத்திற்கும் அதில் பதில் இருக்கிறது...எழுத்துப் பிழைகள் இருப்பதை சுட்டினால்....அதை மாற்றி பதிய முயற்சிக்கிறேன்.....

இப்போதைக்கு இந்தளவுடன்.....

எல்லா மதத்திற்கும் எதிராகவும்....இழிவுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் பண்ணுவார்கள். பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்...அதற்குத்தான் தமிழ் ஒவியா...சங்கமித்திரன்...நாத்திகன்....பெரியார் இணையதளம் சென்று காண்டுவிட்டு பதிந்தால் நலம். அதையும் அங்கே பின்னூட்டத்தில் வைத்திருக்கிறேன்.

நம்பி said...

குடிமகன் said.....
//பெண்ணடிமைத்தனத்தை இந்து மதத்தில் மட்டுமே காணமுடிகிறது என்கிற உங்கள் கருத்து ஏற்புடையதல்ல, இஸ்லாம் மதத்தில் இன்றும் பெண்கள் எப்படி வாழ்கின்றனர் என்பது எல்லாருக்கும் தெரியும்.. சமீபத்தில் தான் ஒரு அரபுநாடு பெண்ணுக்கு வாக்குரிமையையே அளித்து, மேற்கத்திய நாடுகளில் கூட நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமல்தான் இருந்தது, மேற்கத்திய நாடுகளிலும் பெண்ணுரிமைக்காக எவ்வளவோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன... //
இந்த கேள்விக்கும் சேர்த்து தான்.....இந்த பின்னுட்டம்....
.............................................................
எல்லாம் பிறமதங்களில் இல்லை...குறைகள் உண்டு...ஒப்பிட்டு பார்த்தால் நிறைகள் அதிகம்)
********************
இது பற்றி பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.....பெரியாரிஸ்டுகளும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.....
அதைத்தான் அங்கே இறக்குமதியான மதம்.....அதிலும் குறைகள் இருக்கிறது...ஆனால் நிறைகள் அதிகம் என்று வைக்கப்பட்டிருக்கிறது....
குரானில் பாலியல் தொழில் புரியும் பெண்ணை கல்லால் அடிக்கவேண்டும் என்றும் இருக்கிறது...ஆகையால் குறைகளில்லாமல் இல்லை...இதையும் பர்தா மேட்டர் எல்லாம் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது....இது போன்று எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளது. குறைகளினால் இன்னும் மதங்கள தோன்றிக்கொண்டேயிருக்கின்றன...இந்த உலகில் மரணபயம் இருக்கின்ற வரையில் நம்பிக்கைகள் புதிது புதிதாக உருவாகிக்கொண்டேயிருக்கும். அதை தடுக்க முடியாது என்று விவேகானந்தர் கூறியது போல் இவைகள் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

இது அரேபியாவில் இருந்து இறக்குமதியான மதம். பெண்களை அடிமையாக பாவிப்பது...அந்த மதம்....அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்டது. அதை அவர்களும் விலக்கி கொண்டு தான் வருகிறார்கள்.

இங்கிருந்து தாவியவர்கள், இறை மறுப்பாளர்கள் எல்லாம் யார்? இந்து மதம் என்ற பிரிவில் வருபவர்கள் தானே.....அதிலிருந்து வெளியேறி நம்பிக்கைகளை துறந்தவர்கள் தானே....என்ன? வானத்தில் இருந்தா குதித்தார்கள்.....இந்த குறைபாடுகளாகத்தான் வெளியேறினார்கள்....இது மாதிரி பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு குறைபாடுகளுக்காக யாராவது இங்கு நல்ல விஷயம் இருக்கிறது...என இஸ்லாம் மதத்தில் இழிவுகள் இருக்கிறது என்று வந்திருக்கிறார்களா...? வரவில்லையே அப்புறம் இதை சாடாமல் எப்படி மற்ற மதங்களை சாடிக்கொண்டிருக்க முடியும்,

இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் எல்லாம், குறைந்தபட்சம் ஆமாம் இங்கு இந்து மதத்தில் இது நீக்கப்படவேண்டும், இந்த இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டும். என்று வைத்திருக்கிறார்களா? மாறாக அங்கே இல்லையா? இங்கே இல்லையா? என்று இதை சரிகட்ட, சப்பைக்கட்டு கட்ட அதாதவது இந்த மத இழிவுகளை அப்படியே தொடர பார்ப்பனர்கள் முனைகிறார்கள், அதற்கு பார்ப்பனரல்லாதவர்களும் உடனபடுகிறார்கள்.

குடிமகனை மதவாதியாக பார்க்கவில்லை ஆகையால் சுருக்கமாக வைத்தேன். சுருக்கமே இம்மா பெரிசாக போகிறது. இது எல்லாம் பல இடங்களில் பதிவாக இருக்கிறது. சென்று காணலாம். மதவாதியாக இருந்து கொண்டு இதை எல்லாம் அலச முடியாது.

**************************

பிறமதங்களில் வர்ணாசிரமம் என்று ஒன்று இல்லை...இங்குள்ளது போல் 6000 சாதிகள் இல்லை. வர்க்கபேதங்கள் இல்லை. இது இங்குள்ள இந்து மதத்தில் இருக்கின்றது தானே......இதை ஒ.ழிக்கவேண்டியது தான் முதல் வேலை. அந்த வேலையைத்தான் மும்முரமாக பார்ப்போம் இதை கிருத்துவன் வலியுறுத்தினால், இஸ்லாம் வலியுறுத்தினால் அங்கேயும் எதிர்ப்போம்,

தொடரும்...1

நம்பி said...

...தொடர்ச்சி...1

உலகிலேயே அதிகம் பேர் பின்பற்றக் கூடிய மதம் இஸ்லாம் மதம்...அங்கே சாதிகள் இதுமாதிரி 6000 என்று இருக்கிறதா.....? தலையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்ற இழிவுகள் இருக்கிறதா....?

உன் பணியாள் பசித்திருக்க வைக்காதே...முதலில் உண் பணியாள் உண்ட பிறகு தான் நீ உண்ண வேண்டும் என்ற ஆணுக்கான சமத்துவமாவது அங்கு உண்டு. இங்கு உண்டா....? இது உண்மையில் பொதுவுடமை தத்துவம்....

கிருத்துவ மதத்தில் இவர்தான் அர்ச்சகராக அதாதவது பாதராக வரவேண்டும் ஜாதி வைத்து தடை போடுகிறார்களா? கிருத்துவ மதத்தில் பெண்களை கோயிலின் உள்ளே விடமாட்டேன் கிருத்துவம மதம் என்று கூறுகிறதா? இயேசு கிருஸ்து கூறினாரா? ஆனால் இந்து மதம் கூறுகிறது.


குறைந்தபட்சம் நம்பிக்கையிலாவது சமத்துவம் போற்றப்படுகிறது...ஆணுக்காவது போற்றப்படுகிறது,

இதையெல்லாம் பல இடங்களில் கருத்துகளாக வைத்தாயிற்று.....இங்குள்ள ஒரே குறைபாடு "அப்டேஷன்" இல்லாததினால் இந்த மிக மிக பழமையான கேள்வி பதிவில் எழுந்துள்ளது...அதைத்தான் பின்னூட்டத்தில் இது பழைய கேள்வி....பெரும்பாலும் மதவாதிகள் வைக்கின்ற கேள்வி.. என்று வைக்கப்பட்டுள்ளது காணலாம்......ஏன்? இந்து மதத்தை மட்டும் தாக்குகிறீர்கள்...? என்று பெரியார் உயிருடன் இருந்த பொழுதே...மவுடிகமான காலத்தில் வைக்கப்பட்ட கேள்வி...இது இன்னும் இணையக்காலத்தில் இதற்கான பதில்கள் பல தளங்களில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.

பெரியார் வெள்ளைக்காரர் ஆண்ட காலத்திலேயே அவர்களின் கிருத்துவ மதத்தை தாக்கி சிறைக்கும் சென்றிருக்கிறார். போப்பாண்டவரையும் தாக்கித்தான் கருத்துக்கள் வைக்கப்படுகிறது. ஆனால் ஜாதியால் மனிதன் பிரித்தாளப்படுகிறானா? இல்லையே....இங்கு இது தானே பிரச்சினை....இதுதானே ஒருவனை மேலே வரவிடாமல் தடுக்கிறது. இதை வைத்து தானே இட ஒதுக்கீடு.....

கிருத்துவ பாதிரிகள் பாலியல் கொடுமை புரிந்தால் சாடவில்லை...யாரையும் பெரியாரிஸ்டுகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. அதிகம் பிரச்சினை இந்த இந்து மதத்தில் தான்.

இங்குள்ள குறைபாடுகளை மறைக்க இன்னொரு மதத்தின் குறைபாடு தீர்வாகாது. இங்குள்ள குறை குறை தான். அதுமட்டுமல்ல இங்கு மிகப்பெரிய அநீதி உள்ளது. அது இன்றவளவும் ஜாதி மோதல்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கே பிற மதத்தில் நடைபெறுகிறதா? அதற்கும் ஒரு இடத்தில் பின்னூட்டமாக வைத்துள்ளேன்.

உட்பிரிவு செல்வாக்கு சம்பந்தமான சண்டைகள் நடக்கும், இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கு யாரும் ஒரு குரூப்பாக கிடையாது.

தொடரும்....2

நம்பி said...

தொடர்ச்சி...2
முதலில் தமிழர்களுடைய மதம் இந்து மதமல்ல....அவர்கள் வழிபாட்டு முறை இயற்கையை வணங்கியது ஆகும். இதற்கு பல வரலாற்று புத்தகங்கள் ஆதாரங்களாக உள்ளன. இலக்கியங்களும் இதைத்தான் கூறுகின்றன. பிரபஞ்சன் அணிந்துரை எழுதிய தமிழக போயில்கள்...தமிழர்கள் வழிபாட்டு முறை என்ற நூலிலும் காணலாம்.

வாழ்ந்த மனிதர்களைத்தான் தமிழர்கள் வணங்கி வந்தார்கள். வாழ்ந்த பெண்களை தியாகம் புரிந்த பெண்களை, கொலையுண்ட பெண்களை, ஊ,ருக்காக உயிர் நீத்த பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்தனர். அய்யனார், முண்டக்கண்ணி, செல்லியம்மன்...கண்ணகி...இவர்கள் வாழ்ந்த பெண்கள். தமிழர்கள் மரபில் ஆண் கடவுள்களே கிடையாது. பெண் கடவுள்கள்தான்.

ஆரியக்கலாச்சாரம் இங்கு நுழைந்த போது தான் இந்த மதம் தலை தூக்கின...ராமன் நூலை யார் எழுதியது....வடபுலத்தார்...வாழ்ந்த இடமாக கூறப்படுவது வடபுலம்....சண்டை போட்டுக்கொள்வதும் வடபுலத்தார்....இங்குள்ளவர்களுக்கும்.....இந்த மொழிபேசுபவர்களுக்கும் என்ன சம்பந்தம்.? ராமன் தமிழ் மொழி பேசுபவனாக கூறப்பட்டுள்ளதா....?

எல்லா புராணங்களும் வடபுலத்தை மையமாக வைத்து தான் எழுதப்பட்டுள்ளது. அதே போன்று ராமன் கதைகளும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு தான் எழுதப்பட்டுள்ளது.

இது மாதிரி பிறமதங்களில் உள்ளதா?...அங்கு ஒரே மதத்தலைவர்...அந்த மதத்தலைவரை சுற்றித்தான் நம்பிக்கைகள், அதைத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு...ஆகையால் இங்கு இந்து மதத்தை வைத்து ஒரு அரசியல் நடைபெறுகிறது.

இந்து மதம் தலைமைக்கு யார் காவலாக இருக்கிறார்கள். எங்கே சங்கரமடத்தில் ஒரு தலித் தலைவராக வரமுடியுமா? கொலைபண்ணினாலும் பார்ப்பனன் தான் தலைவனாக வரமுடியும். மத்தவ தொட்டான் தண்ணி தெளிப்பே இது இஸ்லாம் மதத்தில் கிருத்துவ மதத்தில் இருக்கிறதா...வேறு குறைபாடுகள் இருக்கும். அது அடுத்தகட்டப் பிரச்சினை. இங்கு முதலுக்கே மோசம்.

அதனால இங்கு இந்த மதத்தை வைத்து நடக்கும் பித்தலாட்டத்தை, இதை வைத்து ஆதாய அடைய நினைக்கும் பார்ப்பனனை எதிர்த்து தான் தி.க வின் போரட்டம் இருக்கும்.. இது பெரியார் அறிவுறுத்தியது தான். புதியது இல்லை. என்று இவையெல்லாம் ஒழிகிறதோ அன்று வரை தொடரும். கோயில் அனைத்து ஜாதி அர்ச்சகர்களே பெரியார் வழி சரி என்று சொல்லி பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் அப்புறம் என்ன?

குடிமகன் மதவாதியாக இருந்தால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தில் இருந்து வெளியே வந்து எதையும் சாராமல் இருந்தால் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ளமுடியும். அது தான் அங்கே பின்னூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பிறமதங்களின் எப்போதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, என்பதை மேற்கூறிய தளங்களில் சென்று காணலாம்.

*********************

குடிமகன் said...

@ நம்பி -
விளக்கங்களுக்கு நன்றி... மீண்டும்மீண்டும் அதே கேள்விகள் அதே பதில்கள்தான் அதை இத்தோடு நிறுத்திவிடலாம்.. ஆனால் கடைசியில் ஒன்று மட்டும் விவாதத்தில் விடுப்பட்டதாக நான் நினைக்கிறேன்..

ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலை தவிர்துவிடுகிரீர்கள்... இதற்கும் உங்கள் பதிலென்ன என்பதை இங்கே பதிவு செய்யவும்..

ஆரியனையும், இந்து என்கிற சித்தாந்தத்தையும் ஒழித்துவிட்டால், திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?

ஆரியனை அழித்துவிட்டால், கீழ் சாதி என்று கருதப்படுகிற ஒரு இளைஞனுக்கு மேல் சாதி என்று கருதப்படுகிற பெண்களை கட்டிக் கொடுக்க போட்ட போட்டி நடக்குமோ?

இவர்கள்தான் எல்லாத்துக்கும் மூல காரணம் என்று சொல்லி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதனைக் கேட்கிறேன்..

பெரியார்.. நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார்... ஏன்? எதற்கு? எப்படி? கேள்விக்கணைகளை தொடுத்து எது சரி என்று உன் மனதிற்கு உண்மையாக சரி எனப்படுதோ அதைசெய்யவேண்டும் என நான் எடுத்துகொள்கிறேன்...

ஒரு நம்பிக்கை மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத வரையில் எந்தபிரச்னையும் இல்லை.. இது கடவுள் நம்பிக்கைக்கும், கடவுள் இல்லையென்கிற நம்பிக்கைக்கும் பொருந்தும்.. அதாவது இரண்டிலுமே திணிப்பு அறவே இருக்கக்கூடாது.. விழிப்படையச் செய்தலுக்கும் திணிப்புக்கும் உள்ள வேறுபாட்டை அறியவேண்டும்(தி.க வை குறிப்பிட்டு சொல்லவில்லை எனவே, தி.க எதையும் திணிக்கவில்லை என்பது போலான பதில் தேவையில்லை)

நம் சமூக முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தடையாக உள்ளதோ அவற்றை புறந்தள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு இயக்கம்.. காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கு என்ற பாதையில் இருந்து விலகாமல் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலும்.. தி.க தற்போது குறுகிய பாதையில் பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் எழுதப்பட்ட பதிவு இது.. நீங்கள் புரிந்துகொள்வீர்களா என தெரியவில்லை..

நம்பி said...

//குடிமகன் said...
@ நம்பி -
விளக்கங்களுக்கு நன்றி... மீண்டும்மீண்டும் அதே கேள்விகள் அதே பதில்கள்தான் அதை இத்தோடு நிறுத்திவிடலாம்.. ஆனால் கடைசியில் ஒன்று மட்டும் விவாதத்தில் விடுப்பட்டதாக நான் நினைக்கிறேன்..

ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலை தவிர்துவிடுகிரீர்கள்... இதற்கும் உங்கள் பதிலென்ன என்பதை இங்கே பதிவு செய்யவும்.. //

தாராளமாக உங்கள் கேள்வியென்ன? அதை தெளிவாக பதிவு செய்யவும்…? அதில் முக்கியம் சார்பு இல்லாமல் இருக்கவேண்டும்? இங்கே முன்பு குறிப்பட்டதை போல அப்டேஷன், மிக மிக குறைவு…காரணம் அத்தனை கேள்விகளும் புதிய தலைமுறைகளால் கேட்கப்படும் கேள்விகள்…. அப்டேஷன் இல்லாமல் கேட்கக்கூடிய கேள்விகள்…..(குறைந்த பட்ச அப்டேஷனாவது இருக்கவேண்டும்)

குடிமகன் said...
//ஆரியனையும், இந்து என்கிற சித்தாந்தத்தையும் ஒழித்துவிட்டால், திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?//

“இந்து” என்பது "சித்தாந்தம்" என்று யார் உங்களுக்கு கூறியது? இதில் யார் கூறியது சரி? அதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் என்ன? அதை விளக்கவும்…? அதன் பொதுமையான, சமத்துவமான “சித்தாந்தம்” என்ன? முதலில் சித்தாந்தம் என்பது என்ன? அதை ஏன்? அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? உலகம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? உலகத்தை விடுங்கள் இது நடைமுறையில் இருக்கும் நாட்டிலும் ஏன் எதிர்க்கப்படுகிறது? அதை அரசும் வரவேற்கிறது, தடை செய்யவில்லலையே ஏன்? (இதெல்லாம் பல்கைலைக்கழக ஆய்வில் வருகிறது)

குடிமகன் said...
//ஆரியனை அழித்துவிட்டால், கீழ் சாதி என்று கருதப்படுகிற ஒரு இளைஞனுக்கு மேல் சாதி என்று கருதப்படுகிற பெண்களை கட்டிக் கொடுக்க போட்ட போட்டி நடக்குமோ? //

அப்படி என்றால் ஆரியனால் தான் இந்த இந்து மதம் உருவானது என்பதை இந்தப் பதிவின்படியும் அதைத் தொடந்து வந்த பின்னூட்டமும் ஒத்துக்கொள்கிறது……அதை சரி என்றும் இந்த பின்னூட்டம் ஒத்துக்கொள்கிறது….அப்படி என்றால் “கீழ் சாதி” என்ற பிரிவு ஒன்று எப்படி? வந்தது என்றும் தெரிந்திருக்குமே…? (இதைத்தான் அப்டேஷன் குறைவு என்று பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.)

சரி……“கீழ்சாதி” என்ற ஒன்று எப்படி வந்தது என்பது நன்றாக தெரிந்துவிட்ட பிறகு, அதை சுத்தமாக ஒழிக்கவேண்டிய வழியும் மிக நன்றாக தெரிந்திருக்குமே? அதை தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அதை சரி! என்று வாதிட வைக்கும் (வைத்திருக்கும் பின்னுட்டம் அதை சரியாக உணர்த்துகிறது…மீண்டும் பார்வையிடலாம்) மனப்பான்மையை உங்கள் சக கீழ்ச்சாதி நண்பரிடம் வாதிப்பீர்களா? (இப்படி நினைப்பதே மகா பாவம்) (மன்னிக்கவும்....இந்த காலகட்டத்தில் இப்படித்தான் கேட்க வேண்டும்)

மேற்குறிப்பிட்டபடி, கேள்வி கேட்டபிறகு .......... எந்த நண்பனாவது பழகுவானா? (ஒரு உதாரணத்திற்கு) (இதையெல்லாம் வெளிப்படையாக தெரிவித்த பிறகு)

இன்றைய காலகட்டத்தில் கலப்புத் திருமணங்கள் சகஜகமாகவே ஆகிவிட்டது? இந்த அடிப்படையில் எல்லா ஜாதிப்பிரிவினரும் எல்லோருக்கும் உறவினர்கள்? இப்படி ஆகிவிட்டப்பிறகு இந்த கேள்வி எழுவது நியாயமா? அப்படி என்றால் உறவுகளைக் கூட பாராமுகமாக, பாராபட்சமாக பார்ப்பது எந்த விதித்தில் நியாயம்? தெரியவில்லையே?
......தொடரும்...1

நம்பி said...

தொடர்ச்சி...1

(1000 பேர் கொண்ட பல்வேறு ஜாதிப் பிரிவினரை ஒன்றாக, எந்த அடை
யாளமுமில்லாமல், ஓரே மாதிரியாக நிற்கவைத்து இதில் யார், கீழ் சாதி இதில் யார்? மேல் ஜாதி? என்று குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்று கூறினால், ஒருவரல் கூறமுடியுமா? முடியாதா?

நிச்சயம் கூறமுடியாது?

ஏன்? கூறமுடியாது? ஏனென்றால் அடையாளமில்லை.

அடையாளம் வைத்து கூறமுடியுமா? கூற முடியாதா?

நிச்சயாமாக 100 க்கு 200 சதவீதம் கூறமுடியும்!

இப்போது இந்த அடையாளங்கள் இருக்கிறதா இல்லையா?

பள்ளியில் எதற்கு சீறுடை கொண்டு வரப்பட்டது? எந்த காரணத்திற்காக? திரைப்படங்களில், பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளங்களை மட்டும் மறைத்து காட்டுகிறார்களே ஏன்? சென்சார் தடை செய்கிறதே ஏன்? எதற்காக?

அதை காட்டினால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? பள்ளிகளில் யூனிபார்ம் சிஸ்டத்தை ஒழித்தால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது……?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரளவுக்காவது இது பொருள் தருகிறதா…? இல்லை இன்னும் பட்டவர்த்தனமாக குறிப்பிட்டுக் காட்டவேண்டுமா? அதற்கும் தயார்? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும்….! பொருத்திருக்கவும்!

குடிமகன் said...
//பெரியார்.. நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார்... ஏன்? எதற்கு? எப்படி? கேள்விக்கணைகளை தொடுத்து எது சரி என்று உன் மனதிற்கு உண்மையாக சரி எனப்படுதோ அதைசெய்யவேண்டும் என நான் எடுத்துகொள்கிறேன்//

ஆமாம்! உண்மைதான்! பகுத்தறிவு என்பது என்னுடனே போவது இல்லை! என்னிலும் ஒருவன் மிக சிறப்பாக கூறுவானாயின் அவனே பகுத்தறிவுவாதி! இதை பெரியார் தான் கூறினார். அதனால் தான் அவர் "பெரியார்"/ இதை எந்த ஆன்மீகவாதி என்ற போர்வையில் உள்ளவன் கூறினான்.

பெரியார் கடவுளை வணங்கவேண்டாமென்றும் கூறவில்லை…உமக்கு விருப்பமாயின் இன்னும் ஆயிரம் கடவுளைக்கூட உருவாக்கிக்கொள்ளத்தான் சொன்னார். ஆனால் சுயமரியாதையுடன். உனக்கும் கடவுளுக்கும் தான் தொடர்பின் இடையில், வேறு எவனையும் தொடர்பு படுத்தவேண்டும், அல்லது தெரியப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே கொள்ளத் தேவையில்லை. (நம்பிக்கையிருந்தால்) கடவுளை வைத்து பிறரிடம் நம்மை அடிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. நாம் நம்பும் ஒன்றை பிறரையும் கட்டாயம் நம்பித்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தவும் தேவையில்லை.

பெரியாருக்கு விருப்பமானவர் சாக்ரட்டீஸ் அதற்காக சாக்ரட்டீஸ் சொன்னதையே பெரியார் சொல்லவில்லை. அதனினும், மேலொன்றதாக, புத்தருக்கும், விவேகானந்தருக்கும், இராமலிங்க அடிகளாருக்கும் (சாக்ரட்டீஸ் சொன்னதே அவருடைய மாணவர்களால் எழுதப்பட்ட (பிளேட்டோ) குடிமகன் said... நூல்களினால் மட்டுமே அறியப்படுகிறது…இது வரலாறு) மேலானதாக தான் அவர் கொள்கை கோட்பாடு வருகிறது. அவர்கள் சொன்னதும் வருகிறது.
குடிமகன் said...
//நம் சமூக முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தடையாக உள்ளதோ அவற்றை புறந்தள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு இயக்கம்.. காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கு என்ற பாதையில் இருந்து விலகாமல் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலும்.. தி.க தற்போது குறுகிய பாதையில் பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும் எழுதப்பட்ட பதிவு இது.. நீங்கள் புரிந்துகொள்வீர்களா என தெரியவில்லை.. //

இதை புரிந்து கொண்டதால் தான் தங்கள் பதிவில் உள்ள மிகவும் முரண்பாடக தெரிந்த இரு வரியை மட்டும் எடுத்து அதற்கான விளக்கத்தையும், பொதுவான விளக்கத்தையும் வைத்துள்ளேன். (இது முதல் பின்னுட்டம்.)

அதற்கு மேல் கீழே அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளது எல்லாம் அதற்கு மேல் பதிவிற்காக வைத்த பின்னூட்டக்காரர்களின் பின்னுட்டத்தின் வன்மை வரிகளுக்கு (முழுவதும் முரண்பாடாக இருந்தாலும் குறிப்பாக அதிக முரண்பாடாக தெரிந்த விஷயங்களை மட்டும் எடுத்து பதிவிட்டிருக்கிறேன்….நன்றாக……… காணலாம்.) ஏற்ப பதில் பின்னூட்டம் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் மேற்கோளுடன், வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

வரிக்கு வரி….பின்னுட்டம் வைக்கப்படவில்லையே! முரண்பாடாக எமக்கு தெரிந்த வரிக்கும், அதனுடன் தொடர்புடைய பொதுவான கருத்தையுமே வைத்திருக்கிறேன். எனக்கெதிராக வைக்கப்பட்ட எதிர் விமர்சனைத்தையும் அந்தளவுக்கே தவிர்த்திருப்பேன், அதையும் பின்னூட்டத்தில் தாங்கள் காணலாம்.

குடிமகன் said...

@நம்பி - எனக்கு அப்டேஷன் குறைவுதான் நண்பரே! ஆனால் அப்டேஷன் நிறைந்த, நிறைய விஷயங்கள் தெரிந்த நீங்கள்.. வினாக்களுக்கு நேரடியாக பதிலளித்து.. எனக்கு புரியவைத்திருக்கலாம் அல்லவா?

என் கேள்வி: ஆரியனையும், இந்து என்கிற சித்தாந்தத்தையும் ஒழித்துவிட்டால், திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?

உங்கள் பதில்: “இந்து” என்பது "சித்தாந்தம்" என்று யார் உங்களுக்கு கூறியது? இதில் யார் கூறியது சரி? அதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் என்ன? அதை விளக்கவும்…? அதன் பொதுமையான, சமத்துவமான “சித்தாந்தம்” என்ன? முதலில் சித்தாந்தம் என்பது என்ன? அதை ஏன்? அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? உலகம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? உலகத்தை விடுங்கள் இது நடைமுறையில் இருக்கும் நாட்டிலும் ஏன் எதிர்க்கப்படுகிறது? அதை அரசும் வரவேற்கிறது, தடை செய்யவில்லலையே ஏன்? (இதெல்லாம் பல்கைலைக்கழக ஆய்வில் வருகிறது)

என் கேள்வி: ஆரியனை அழித்துவிட்டால், கீழ் சாதி என்று கருதப்படுகிற ஒரு இளைஞனுக்கு மேல் சாதி என்று கருதப்படுகிற பெண்களை கட்டிக் கொடுக்க போட்ட போட்டி நடக்குமோ?

உங்கள் பதில்: அப்படி என்றால் ஆரியனால் தான் இந்த இந்து மதம் உருவானது என்பதை இந்தப் பதிவின்படியும் அதைத் தொடந்து வந்த பின்னூட்டமும் ஒத்துக்கொள்கிறது……அதை சரி என்றும் இந்த பின்னூட்டம் ஒத்துக்கொள்கிறது….அப்படி என்றால் “கீழ் சாதி” என்ற பிரிவு ஒன்று எப்படி? வந்தது என்றும் தெரிந்திருக்குமே…? (இதைத்தான் அப்டேஷன் குறைவு என்று பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.)

சரி……“கீழ்சாதி” என்ற ஒன்று எப்படி வந்தது என்பது நன்றாக தெரிந்துவிட்ட பிறகு, அதை சுத்தமாக ஒழிக்கவேண்டிய வழியும் மிக நன்றாக தெரிந்திருக்குமே? அதை தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அதை சரி! என்று வாதிட வைக்கும் (வைத்திருக்கும் பின்னுட்டம் அதை சரியாக உணர்த்துகிறது…மீண்டும் பார்வையிடலாம்) மனப்பான்மையை உங்கள் சக கீழ்ச்சாதி நண்பரிடம் வாதிப்பீர்களா? (இப்படி நினைப்பதே மகா பாவம்) (மன்னிக்கவும்....இந்த காலகட்டத்தில் இப்படித்தான் கேட்க வேண்டும்)

நான்கூட என் பள்ளி, கல்லூரி தேர்வுகளில் பதில் தெரியாத பல கேள்விகளுக்கு இப்படி சம்மந்தமில்லாமல் பதில் அளிப்பதுண்டு, ஒன்றிரண்டு மதிப்பெண்களாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..

உங்கள் இயக்கத்தை புரிந்துகொள்ளும் முயற்சியில் கேள்விகளை கேட்டுவிட்டேன்.. இது உங்களை மனதளவில் பாதித்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.. இயக்கத்தை புரிந்துகொள்ளும் முயற்சியை இத்தோடு கைவிடுகிறேன்..

உங்கள் வாதங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாக நீங்களே ஒரு முடிவுக்கு வந்தாலும்.. நான் வருத்தப்பட போவதில்லை..
விவாதத்திற்கு மிக்க நன்றி!!

நம்பி said...

பின்னுட்டத்திற்கு முன்....சில வார்த்தைகள்...
எதையும் பர்சனலாக எடுத்துக்கொள்ளமால் இருப்பது நலம்...இதை விவாதமாக எடுத்துக்கொள்ளவும்.....இன்னொன்று...என்னதான் சர்ச்சைகள் கேள்விகளாக எழுந்தாலும், அதை உள்வாங்கி அனைவருக்குமான பொதுவான கருத்தாகத்தான் பதிவது வழக்கம். மின்னஞ்சல் மாதிரி நேரிடையாக பதிய முடியாது. இது பொது பார்வை, அனைவரும் பார்வையிடுவது. அப்படித்தானே பதிவும் இருக்கிறது. இப்படி பார்த்து பார்த்து பதிந்தே பர்சனலாக போகும் பொழுது....எப்படி நேரிடையாக பதிவது...எதையும் அங்கிருந்து முடிவெடுக்கவேண்டாம்...அப்டேஷன் என்பது இனைறய செய்தித்தாள் படிக்கவில்லை என்றால் இன்றைய செய்தி என்ன என்று? அல்லது என்ன நடந்தது? என்று தெரிய வாய்ப்பில்லை...இது ஒரு குறையில்லை.....இல்லாவிட்டால் அந்த செய்திகள் முழுவதையும் திருப்பி இங்கே குறிப்பிடவேண்டும்....

இரண்டாவதாக.... பதிவில் வைத்திருக்கும் விமர்சனம் முழுவதையும் எடுத்து கையாளவில்லை...(அதில் மிகப்பெரிய விமர்சனம் வைக்கப்பட்டிருந்தும்)... இத்தனைக்கும் தனிநபர் கருத்தே நேரிடையாக வைக்கப்பட்டுள்ளது..
குடிமகன் said...
.//இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர்//.

அதையும் மேலோட்டமாகத்தான் தொட்டுக்காட்டியிருக்கிறேன்...பரசனலாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக... பொதுவாக.......கலந்து கொள்வதில்லை...குடிமகன் பொது பிரச்சினைகளில் அக்கரை எடுத்துக்கொள்பவர் என்ற காரணத்திற்காக பின்னூட்டமிடப்பட்டுள்ளது...பின்னூட்டமிடுவதை வரவேற்று இருப்பதால்.....)

இந்து எதிர்ப்பு...பரப்புரையா? நாங்கள் எல்லாம் இந்து மதத்தில் தானே இருக்கிறோம்!..பதிவேட்டின்படி..அப்புறம் எப்படி பரப்புரையாகும்.....

எதிர்ப்பது அனைத்துமே பரப்புரையாகுமா?
அப்படி என்றால் நாட்டில் ஒரு போராட்டமும் நடைபெறாதே!

சரி, பதிவு "இந்து எதிர்ப்பு" என்ற இதை எதிர்க்கிறதா? அல்லது ''சாதி மதக்கலவரங்கள்'' என்ற இதை எதிர்க்கிறதா?....அப்படி என்றால் அதுவும் இந்து எதிர்ப்பாகத்தானே வரும். கேள்விகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தே கேட்கப்படுகிறது...அப்புறம் எப்படி மதக்கலவரங்களை பற்றி கவலைப்பட முடியும்? மற்றவர்களை எப்படி குற்றம் சாட்ட முடியும்? சாதிக்கலவரங்களை பற்றி எப்படி கவலைப்பட முடியும்? சாதியே இந்து மதத்தில் தான்! அதுவும் 6000 சாதிகளுக்கு மேல் உள்ள மதம்.....

அதுவும் தொழிலை வைத்து சாதி பிரிக்கப்பட்டதே இந்த இந்து மதத்தில் தான். கீழ்சாதி, தீண்டத்தகாத ஜாதி, கண்ணால் பார்க்க கூடாத ஜாதி என்பதெல்லாம் இந்த இந்து மதத்தில் தான். அப்புறம் எப்படி சாதிக்கலவரங்களை பற்றி கவலைப்பட முடியும்? எந்தக் கேள்வி..... வைத்தாலும் திரும்ப, அது நம்மையும் நோக்கித்தானே...... சுட்டுகிறது.....

இதையெல்லாம் தொடாமல் ""....... பிழை இருக்கிறது"" என்ற வார்த்தையுடன் பின்னூட்டத்தில் முடிக்கப்பட்டதை காணலாம்.
**********************************
தொடரும்...1

நம்பி said...

தொடர்ச்சி....1

குடிமகன் said...
//என் கேள்வி: ஆரியனையும், இந்து என்கிற சித்தாந்தத்தையும் ஒழித்துவிட்டால், திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?//

இப்பொழுது யார்? யாரை அழித்துக்கொண்டிருப்பது...ஆரியனா? திராவிடனா?......3 சதவீத ஆரியன் 97 சதவீத திராவிடனை அழித்துக் கொண்டிருப்பது நியாயமா? இது மாதிரி வேறெங்கு இருக்கிறது....வேறு எந்த நாட்டில் இருக்கிறது. (நியாயமாக வேறொன்று நடக்கவேண்டும்...விரைவில் நடக்கும்)

தலையில் பிறந்தவன் திராவிடன், காலில் பிறந்தவன் பார்ப்பனன் என்று திராவிடனா எழுதிவைத்து ஆரியனை அழித்துக்கொண்டிருக்கிறான்.

திராவிடனா? தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு...உயர்த்திக்கொண்டு மற்றவர்களை முன்னேறவிடாமல் தாழ்த்திக்கொண்டிருக்கிறான். (இப்படி திராவிடன் எழுதியிருந்தால் திராவிடனை எதிர்த்து போராட்டம் திரும்பியிருக்கும்.)

சமச்சீர் கல்வி கொண்டுவருவதினால் மட்டும் எல்லோரும் படித்து கி.ழித்து விடுவார்களா? என்று ஆதிக்க கோஷ்டி கேட்பதும், மேலே உள்ளக் கேள்வியும் ஒன்று.

காவல் நிலையம் இருந்தால் மட்டும் குற்றங்கள் ஒழிந்துவிடுமா? என்று கேட்பது போல் தான் மேலே கேட்கப்பட்ட கேள்வியும்.....உள்ளது.

சாதி மதத்தில் இருந்து கொண்டு இதை அலச முடியாது....அதனால் நாங்கள் சாதி மதத்தில் இருந்து மனதளவில் வெளியேறி எதிர்க்கிறோம்....மதத்திற்குள்ளேயே மத அத்தாட்சியுடன்.....
**********************************
சரி! வேறு எந்த முறையில் சாதிக்கலவரங்களை ஒழிக்கமுடியும்? சாதியிலேயே, மதத்திலயே இருந்து கொண்டு தாழ்த்தப்பட்டவனையும், பிற்படுத்தப்பட்டவனையும், தலித்துகளையும் முன்னேறவிடாமல் தடுத்துக்கொண்டே, தீண்டாமையை வலியுறுத்திக்கொண்டே, பிறர் உழைப்பை சோம்பேறித்தனமாக தின்று கொண்டே, மத, ஜாதி அடையாளங்களுடன் திரிந்து கொண்டே, வர்ணாசிரமத்தையும், மனுதர்மத்தையும் பின்பற்றிக்கொண்டே, மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே சாதிக்கலவரங்களை ஒழித்துவிடலாமா? இதைத்தான் நேரிடையாக சொல்லுகிறதா?
**********************
குடிமகன் said...
//....திராவிடன் என்கிற கட்டுக்கோப்பான இனத்திற்குள் எந்த பிரச்னையும் இராது எனச்சொல்கிரீர்களா?//

வேறு பிரச்சினைகள் என்னென்ன? உள்ளது? இன்னும் வேறு எதை? எதையெல்லாம்? பிரச்சினைகளாக, இந்தக் "கட்டுக்கோப்பான" திராவிட இனத்தில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....?

(இங்கு பிரச்சினை என்பது எதை குறிக்கிறது? என்று தெரிந்தால் தானே....)

(குறிப்பு; எதையும் பரசனலாக எடுத்துக்கொள்ளவேண்டாம்...விவாதம் மட்டுமே....)

************************

Naattan said...

Mr. Kudimagan, உங்களுக்கு ஏன் இந்த வேலை ? படிச்சுட்டு கருத்து சொல்லுங்கடான, பக்கம் பக்கமா அடிகிரங்க... டைப் பண்றவனுக்கு அது மட்டும் தான் பொழப்பு போல. உங்களுக்குமா? ஏதோ பக்கம் பக்கமா பேசிட்ட இவனுங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நினைப்பு...

போன ஆட்சியில தி.மு.க வுக்கு கூஜா தூக்கினனுங்க. அதுக்கு முன்னாடி அ.தி.மு.க வுக்கு கூஜா தூக்கினனுங்க. இந்த ஆட்சியில இன்னும் கூஜா வந்து சேரல. அப்புறம் என்ன வெங்காய கொள்கைன்னு தெரியல. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பெரியார் மட்டும் தான் ஆசை படல போல. இப்போ இருகரவனுன்களுக்கு பணமும் அதிகாரமும் தான் கொள்கை. அதுக்கு வாழும் உதாரணம் நம்ம வீரமணி தான். ஹிஹி. ஸ்பெக்ட்ரம் ஊழல எவ்ளோ பங்கு வந்துச்சுன்னு தெரியல.

இவர்கள் பிழைக்க வேறு வழி தேடும்வரை இவர்களே இந்து மதத்தை வளர்ப்பார்கள்.

புரியாதவன் said...

நல்லா இருக்குடா உங்க அடி தடி சண்டை... ப்ளாக்ல இப்டி சண்டை போடலாம்னு இன்றைக்கு தான் தெரிஞ்சுது. நன்றி. அதே கல்யானுதுக்கு நானும் போனேன். தலைவர்கள் அவங்க கருத்துக்கள் நிறைய சொன்னாங்க இல்ல திணிக்க முயற்சி பண்ணாங்க. அதெல்லாம் பரவாஇல்ல மந்திரம் எல்லாம் கெட்ட வார்த்தைகள் அப்படின்னு சொல்லிட்டு ஒரு 500 ரூபா காசு எதுக்கு வாங்கனும்னு சொல்லுங்க யாராவது. . . . .

10 .30 க்கு நல்ல நேரம் முடியுது அதுக்கு முன்னாடி கல்யாணம் செய்யணும்னு எல்லாரும் கேட்டதாக சொல்லி 10 .29 அவர் கடிகாரத்துல காட்டியதாக சொல்லி எதுக்கு கல்யாணம் பண்ண சொன்னார்னு தி.க ல உசிர குடுத்து பேசுறவங்க யாராவுது சொல்லுங்க. எனக்கு பக்கம் பக்கம் எல்லாம் பதில் வேண்டாம். நறுக்குன்னு சொல்லி புரிய வைங்க உங்க எழுத்தாற்றல் மூலமா. நன்றி.

Unknown said...

இங்கே இட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இப்பதிவுக்கு சம்பந்த பட்டவன் என்ற முறையில் என் கருத்துக்கள்.

இப்பதிவினர் கூறுவது போல் தி.க.வினர் பிராமணரையும் இந்து மதத்தையும் அதிகமாக எதிர்க்கிறான்ங்க. பெரியாரை கடவுள் போல் பாவிக்கிறார்கள். ஒரு நடிகரையும் விளையாட்டு வீரரையும் தலைவராக கடவுளாக பாவிக்கும் மக்கள் போல் தான் அவர்களும். அதில் லாபம் அடைக்கிறார்கள்.

@நம்பி,
உங்கள் கருத்துக்களில் இந்து மதத்தையும் பிராமணரையும் மட்டும் தாக்கிறிங்க. இதுவே உங்கள் கருத்துக்களில் ஒன்றி போக முடியவில்லை.

@நாட்டான்,
// இந்து மதம் பார்பனரின் சொத்து என்று எவனுக்கும் (பார்பனர் உள்பட) சொல்ல தகுதி இல்லை. மற்ற மதங்களை போல ஒரு குறிப்பிட்ட மனிதரால் இந்து மதம் நிறுவபடவில்லை. அதன் ஒவ்வொரு வேரும் இலையும் பல உன்னத ஆத்மாகளால் படைக்க பட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்று கலாச்சாரத்தை, தனி மனித ஒழுக்கத்தை கற்பித்தது. இன்று பிழைப்புக்காக ராமனை தூற்றுபவர்கள் தனிமனித ஒழுக்கத்தை தகர்கிரர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் ஒரு குழந்தையின் அறிசுவடியே இந்து மதம் ஆரம்பிகிறது. சில சுயநலவாதிகளின் இடை செருகல்கள் இந்து மதத்தில் வந்ததை ஒப்பு கொள்கிறேன். வீட்டில் அழுக்கு சே ர்ந்தால் கழுவி விடுவது தான் முறை. வீட்டையே கொளுத்துவது அல்ல //

நீங்கள் சொன்ன ஒழுக்கம் பக்தர்களுக்கு தானா. முருகன், சிவன், .. அவர்களுக்கு இல்லையா.. அதே போல் மதத்தாலும் இனத்தாலும் இடும் சண்டை, வீட்டில் இருக்கும் அழுக்கு அல்ல.
ஆனால் சிலர் கூறுவது போல் இல்லை. பெரியார் எல்லா மதத்தை எதிர்த்தார். இந்து மதத்தை மட்டும் அதிகம் எதிர்க்க காரணம். மற்ற மதத்தை விட அதில் பெண்ணடிமையும் சாதி என்ற பெயரில் நேர்ந்த கொடுமையும் அதிகம். மற்ற ஊரை விட உங்கள் ஊரில் நேரும் அசிங்கம் தான் உங்களுக்கு எளிதாக தெரியும்.

எங்கள் மதத்தில் மட்டுமா குறைகள் இருக்கறது. மற்ற மதத்தில் இல்லையா என்று கேட்பது.. நாங்கள் மட்டுமா ஊழல் செய்தோம், போன ஆட்சியில் விட குறைவு தான் என்று சொல்வது போல் உள்ளது.

ஏன் இதே கோபம் இல்ல வருத்தம் இஸ்லாமியர் பெரும்பாலோர் தீவிரவாதிகள் என்று சொல்லும் போது இருக்குமா,

@நாட்டான்,
கண்ணதாசன் பற்றின் பேரில் அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு நாளிதழில்( இரண்டு பக்கங்கள்) படித்தேன். அதிலும் அர்த்தமற்ற கருத்துக்கள் பல இருந்தன.

@புரியாதவன்,
கருத்துச் சண்டைகே இப்படியா.
// அதெல்லாம் பரவாஇல்ல மந்திரம் எல்லாம் கெட்ட வார்த்தைகள் அப்படின்னு சொல்லிட்டு ஒரு 500 ரூபா காசு எதுக்கு வாங்கனும்னு
என்ன சொல்ல வரீங்க. அய்யருக்கு கொடுப்பது போல் ஏன் கொடுத்திங்கனு கேட்கிரிங்க்களா. அப்படியே இருந்தால் public a கொடுப்பாங்களா. கொஞ்சம் யோசிங்க புரியும்.

// 10 .30 க்கு நல்ல நேரம் முடியுது அதுக்கு முன்னாடி கல்யாணம் செய்யணும்னு எல்லாரும் கேட்டதாக சொல்லி 10 .29 அவர் கடிகாரத்துல காட்டியதாக சொல்லி எதுக்கு கல்யாணம் பண்ண சொன்னார்னு தி.க ல உசிர குடுத்து பேசுறவங்க யாராமாறுபட்வுது சொல்லுங்க.

நீங்கள் கல்யாணத்துக்கு போனேன் சொல்றிங்க. மறுபடியும் கொஞ்சம் யோசிங்க.

Naattan said...

@Rajeshkanna

//ஆனால் சிலர் கூறுவது போல் இல்லை. பெரியார் எல்லா மதத்தை எதிர்த்தார்//

அ.தி.மு.க ஆட்சியில் கருணாநிதி சட்டசபை செல்வது போல பெரியார் மற்ற மதங்களை எதிர்த்தார். இப்பொழுது கூட துணிவிருந்தால், கொள்கை என்ற ஒன்று இருந்தால் வீரமணியை இஸ்லாமிய பெண்ணின் பர்தா பற்றி பேச சொல்லுங்கள் பார்போம். சமீபத்தில் சவுதியில் ஒரு பெண் கார் ஓட்டியதற்காக கசையடி கொடுத்தார்கள். அப்பொழுது இந்த போலி பகுதரிவளர்கள் எதை அரிந்து கொண்டு இருந்தார்கள்?

//ஏன் இதே கோபம் இல்ல வருத்தம் இஸ்லாமியர் பெரும்பாலோர் தீவிரவாதிகள் என்று சொல்லும் போது இருக்குமா//

எப்படி சொன்னாலும் உண்மை மாறாதே .தேசிய கீதம் கூட பாடமுடியாது என்று சொல்பவர்களை நான் சக குடிமகனாக நினைக்க முடியாது.


//கண்ணதாசன் பற்றின் பேரில் அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு நாளிதழில்( இரண்டு பக்கங்கள்) படித்தேன். அதிலும் அர்த்தமற்ற கருத்துக்கள் பல இருந்தன//

என்ன அர்த்தம் இல்லாதவை என்று கொஞ்சம் சொன்னால் பிறகு பேசலாம். நானும் இதே போல பொதுவாக பெரியாரின் கருத்துக்கள் குப்பைகள் என்று சொல்லலாம்.


//// அதெல்லாம் பரவாஇல்ல மந்திரம் எல்லாம் கெட்ட வார்த்தைகள் அப்படின்னு//

மந்திரங்கள் கெட்ட வார்தைகள்னு உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? இல்லை உங்களுக்கு சொன்னவனுக்கு தான் நிச்சயமாக தெரியுமா?

//நீங்கள் கல்யாணத்துக்கு போனேன் சொல்றிங்க. மறுபடியும் கொஞ்சம் யோசிங்க//

புரியலைன்னு சொல்றவங்ககிட்ட யோசிங்கனு சொல்றது என்ன நியாயம்?

Unknown said...

//அ.தி.மு.க ஆட்சியில் கருணாநிதி சட்டசபை செல்வது போல பெரியார் மற்ற மதங்களை எதிர்த்தார். இப்பொழுது கூட துணிவிருந்தால், கொள்கை என்ற ஒன்று இருந்தால் வீரமணியை இஸ்லாமிய பெண்ணின் பர்தா பற்றி பேச சொல்லுங்கள் பார்போம். சமீபத்தில் சவுதியில் ஒரு பெண் கார் ஓட்டியதற்காக கசையடி கொடுத்தார்கள். அப்பொழுது இந்த போலி பகுதரிவளர்கள் எதை அரிந்து கொண்டு இருந்தார்கள்?

ஏற்கெனவே பதில் சொல்லிட்டேன் .. இருந்தாலும் உங்களுக்காக...

இந்து மதத்தை மட்டும் அதிகம் எதிர்க்க காரணம். மற்ற மதத்தை விட அதில் பெண்ணடிமையும் சாதி என்ற பெயரில் நேர்ந்த கொடுமையும் அதிகம். மற்ற ஊரை விட உங்கள் ஊரில் நேரும் அசிங்கம் தான் உங்களுக்கு எளிதாக தெரியும்.

உங்களை பொருத்த வரை. பெண்ணடிமை என்பது சவுக்கு அடி, உடன் கட்டை எறிதல் இவை மட்டுமா... ஒரு பெண்ணின் இயற்கை மாற்றதுக்கு ஒரு சடங்கு எடுப்பது, ஆணுக்கு சேவை செய்ய சொல்வது, வரதட்சணை பெரும் பாலன இந்து சடங்குகளில் அவர்களை தாழ்த்துவது இதுவும் அடிமைத்தனம் தான்..

இச்சடங்குகளில் ஒரு காரணம் இருக்கலாம்.. இந்த கால கட்டத்தில் இது தகுமா?

தொழிலை ரீதியாக சாதி வந்திருக்கலாம், இன்றைக்கும் அதை வெறிதனமாக கடை பிடிப்பது தகுமா?

///எப்படி சொன்னாலும் உண்மை மாறாதே .தேசிய கீதம் கூட பாடமுடியாது என்று சொல்பவர்களை நான் சக குடிமகனாக நினைக்க முடியாது.

இந்த கொடூர எண்ணம் தான் மாற வேண்டும் என்று நெனைகிறேன்.. அப்ப தேசிய கீதத்தை தப்ப பாட்றவன் தான் உங்கள் குடிமகனோ

///என்ன அர்த்தம் இல்லாதவை என்று கொஞ்சம் சொன்னால் பிறகு பேசலாம். நானும் இதே போல பொதுவாக பெரியாரின் கருத்துக்கள் குப்பைகள் என்று சொல்லலாம்.

பெரியார் சொன்னதிலும் குப்பைகள் இருக்கலாம்.. அதுக்காக இந்து மதத்தை எதிர்ப்பது யாவுமே குப்பை எடுத்து கொல்ல முடியாது

//மந்திரங்கள் கெட்ட வார்தைகள்னு உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? இல்லை உங்களுக்கு சொன்னவனுக்கு தான் நிச்சயமாக தெரியுமா?

கெட்ட வார்த்தை என்று நான் சொல்லலை… இருப்பினும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு ஏன் புரியாத மொழியில் மந்திரம்..

//புரியலைன்னு சொல்றவங்ககிட்ட யோசிங்கனு சொல்றது என்ன நியாயம்?

தனிப்பட்ட விஷயம் கருதி சொல்லலை.. நடந்தது ஒரு தி.க வினர் நடத்திய திருமணம் மட்டும் அன்று. இரு இல்லங்களில் பொது வாக சிலவற்றை விட்டு கொடுத்து நடந்தவை.

மதம் என்பது ஒரு மொழி , ஊர் மாதிரி தான். அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. ஒரு இந்தியன் அமெரிக்கனா மாறுவதுக்கும்,ஓரு தமிழன் மாரத்தியாக மாறுவதுக்கும் ஒரு திருச்சி வாசி சென்னை வாசியாக மாறுவதுக்கும் ஒன்னும் சொல்லாத மக்கள் ஏன் வெறு மதமோ இல்ல சாதியோ மாறுவதுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு..

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....

குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

See this site :
http://www.vallalyaar.com/

Anonymous said...

சவுதியில் ஒரு பெண் கார் ஓட்டியதற்காக கசையடி கொடுத்தார்கள் என்று ஏதோ குற்றம் மாதிரி சொல்கிறீர்களே?

சவுதியில் பெண்கள் கார் ஓட்டினால் சவுக்கடிதான் தருவார்கள். தமிழ்நாட்டிலும் பல முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். அதை பார்த்தால் நபிஹள் நாயஹம் சொல்வதற்கு மாறாக இப்படியெல்லாம் நடக்கிறதே என்று வருத்தமாக்த்தான் இருக்கிறது.

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபிவழியில் கண்ணியப்படுத்த புரட்சிகரமான வழி .என்று ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன். இதற்கு பல முஸ்லீம்கலீடமிருந்தே ஆதரவில்லை என்பதை பார்க்கும்போது இஸ்லாமே அழிந்துகொண்டிருக்கிறதோ என்று கூட கவலையாக இருக்கிறது.

ஷாரியா விளக்கத்துக்காக, அல் குரான் வசனத்தை விளக்கும் பொருட்டு வீடியோ இணைத்து விளக்கம் அளித்துள்ளேன்.

2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்

இதற்கு என்ன பொருள் என்பதை காண இணைப்பை தட்டுங்கள்

குரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-

நன்றி

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!