நிசப்தமான காலை பொழுது. ரமேஷ் கண்களை தேய்த்தவாறு தலையணைக்கு அருகில் இருந்த கைபேசியில் மணி பார்க்கிறான். கைபேசித்திரை 7.05 என காட்டுகிறது. படுக்கையிலிருந்து எழுகிறான். சோம்பல் முறித்து முகம் கழுவுகிறான். படுக்கையை மடித்து வைக்கலாம் என்று கலைந்து கிடந்த படுக்கையை நோக்கி நடக்கிறான். சுவற்றுக்கு கிழே ஒரு பல்லி இறந்து கிடப்பதை கவனிக்கிறான். ஆம் நேற்றிரவு ரமேஷ் சுவற்றில் பார்த்த அதே பல்லிதான். உடலில் காயங்கள் ஏதுமில்லை ஆனாலும் இறந்து கிடந்தது.
பெரும்பாலான தமிழக இளைஞர்களைப் போலத்தான் ரமேஷும். சொந்தபந்தங்கள் எல்லாம் ஊரில் இருக்கையில், தான் படித்த படிப்புக்கேற்ற ஒரு நல்ல வேலையை சென்னையில் தேடிக்கொண்டான். தினமும் குறைந்தது பத்துமணி நேரமாவது கணினியில் வேலை. சில நாட்கள் இந்த பத்துமணி நேரம் போவதே தெரியாது என்கிற அளவுக்கு அவனுக்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான வேலை இருக்கும். சில நாட்களில் நேரத்தை கடத்த வேண்டி இருக்கும். வேலை, சாப்பாடு மற்றும் உறக்கம் இவைகள் தான் ரமேஷின் ஒருநாள்.
பல்லி. முதுமை அடைந்திருந்தது. சிலநாட்கள் நல்ல உணவு. பலநாட்கள் பட்டினி. என்று வாழ்கையில் பல கஷ்டங்களை சந்தித்த பல்லி. ஏன் தான் பல்லியாக பிறந்தோமோ? என்று மனிதர்களை போலவே இதுவும் சலித்துக்கொள்வதுண்டு. பிறகு இது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து அடுத்த வேளை உணவுக்கான வழியைத் தேடும். கடந்த சில நாட்களாகவே இரையில்லாமல் மிகுந்த பசியில் இருந்தது. ஆனாலும் ஓயாமல் இரையை தேடிக்கொண்டிருந்தது. ஒரு இரை சற்று தொலைவில் இருப்பதை கண்டுகொண்டது. தனது அனுபவத்தை பயன்படுத்தி எப்படியாவது பிடித்துவிடுவது என்ற எண்ணத்தில் இருந்தது.
ரமேஷ் தனது அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். கடைசி நேரத்தில் ஒரு வேலையை கொடுத்து முடிக்கசொல்லியதால் தனது மேனேஜர் மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அறை நண்பன் தூங்கிகொண்டிருந்தான். கை, கால்களை கழுவிவிட்டு நேரே படுக்கைக்கு சென்றான். வேலை வழக்கத்தை விட சற்று அதிகமென்பதால் உடல் அசதி இருந்தது. படுத்தவன் விளக்கு அணைக்க மறந்ததை உணர்ந்து எழுந்தான். அப்பொழுதுதான் அந்த பல்லி பூச்சியை நோக்கி மெதுவாக நகர்வதை பார்த்தான். அவன் ஏனோ அந்த பல்லியை மேனேஜர் போலவும், பூச்சி தம்மை போலவும் பாவித்து. ‘நீங்கள் எல்லாம் உங்களைவிட எளியவர்களிடம் தான் உங்கள் பலத்தை காட்டுகிறீர்கள், உங்களுக்கு சமமானவர்களிடமோ அல்லது உங்களைவிட பலசாலிகளிடமோ இல்லை’ என்று பொருமிக்கொண்டே ஒரு குச்சியை எடுத்து பல்லிக்கும் பூச்சிக்கும் இடையில் தட்டினான். பூச்சி சுதாகரித்துக்கொண்டு ஓடிவிட்டது. பல்லி ஏமாந்தது. பூச்சியை காப்பாற்றி விட்டோம் என்று ரமேஷுக்கு ஒருவித சந்தோஷம். விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சாய்த்தான்.
20 comments:
உணவு சங்கிலி, அருமையான சிந்தனை... தலைப்பே கதைய சொல்லி விட்டது.... தலைப்பை வேறு மாதிரி வைத்திருந்தாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
சூர்யா – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தலைப்பை மாத்திட்டேன்..
ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் ஒரு உயிர் மடிந்து விட்டது.
சிறுகதை அருமை நண்பரே.
@ காந்தி பனங்கூர் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
படித்தவுடன் எதையோ நினைத்து மனம் கனக்கிறது..
அருமையான முயற்சி.. இன்னும் நிறைய எதிர்பார்க்கும் வாசகன்..
அரவிந்த் குமார்.பா – முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வாசகரே!
நன்று மிக நன்று.... படித்து முடித்ததும் மனது எதையோ தேடுகிறது ....
உங்கள் எழுத்துகள் தொடரட்டும்.....
@CoolGuy-வருகைக்கு நன்றி, பாவம் அந்த கோழிய விட்டுருங்க...
நல்ல கதைசார்.நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
@விமலன் – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
அருமையான சிறுகதை
தொடரட்டும் உங்கள் கதைகள்
இன்று என் வலையில்
தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM
tamilmanam first vote
@ "என் ராஜபாட்டை"- ராஜா- வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி..
தமிழ்மணம் எங்களுக்கு சுண்டைக்காய் னு பதிவு போட்டுவிட்டு.. ஓட்டு லாம் போடுறிங்க..
பதிவுலகில் நான் முதலாம் வகுப்பு மாணவன் என்பதால்... தமிழ்மண சண்டை விவரங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை..
நல்ல சிறுகதை. தொடர்ந்து எழுதுங்கள்...
முயற்சி! கதை எழுதவா?
நல்ல சிந்தனை வளம் தெரிகிறது
முயற்சி தொடர வாழ்த்துக்கள்
த ம ஒ 2
புலவர் சா இராமாநுசம்
@HOTLINKSIN.COM - தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
@புலவர் ஐயா- தங்களின் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி!
// Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துகள். //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment
மனசுல பட்டத சொல்லிடுங்க!