Thursday, 19 January 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 1


கடைகுட்டியின் கைவண்ணம்..



தாய்மை


கரிநாளுக்கு கறியானவர்..


கடுங்குளிரிலும் பச்சதண்ணிலயே குளிக்கவிடுரிங்களே..

ஏரோட்டி நெ-1


ஏரோட்டி நெ-2- கொம்புக்கு வர்ணம் இல்லை இம்முறை.. கொம்பு சீவ தொம்பன் கிடைக்கலையாம்..

ஒழச்சி ஓடா தேஞ்சவரு.. ஓட்டாண்டி ஆனவரு..
தானேவில் தவறிப்போன கருவேப்பிலையார்..






மூணு மாசத்துக்கு ஒருக்கா போனாலும் மறக்காம பாசத்துடன் வரவேற்பார்..

திருந்திடாங்கப்பா


இன்று முதல் பதிவின் முடிவில் படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டிகதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளகிறேன்.


குட்டி கதை - 1

நிரம்ப ஏற்றிய கரும்புடன் வண்டியொன்று மேம்பாலத்தின் கிழே நின்றுகொண்டிருப்பதை கவனித்த மாடுமேய்க்கும் சிறுவன். கரும்பு எடுக்கலாம் என்று அருகே நெருங்கினான். வண்டியருகே ஐந்து பேர் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்து பிரச்சனை என்ன என்பதை அறிந்துகொண்டான்.

வண்டி பாலத்தினை கடந்து செல்லவேண்டுமானால் வண்டியின் உயரம் இரண்டு அங்குலம் குறைக்கப்படவேண்டும். அங்கிருந்தவர்கள் கரும்பை பிரித்து பாலத்தை கடந்தவுடன் ஏற்றலாமா இல்லை பத்து கிலோமீட்டர் சுற்றி வேறு வழியாக செல்லலாமா என்று தீவரமாக ஆலோசித்து கொண்டிருந்தார்கள்.

சிறுவன் அவர்கள் அருகே சென்று “நான் ஒரு யோசனை சொல்கிறேன் எனக்கு ஒரு கரும்பு தருகிறீர்களா?” என்றான்.

சொல்லு உன்னோட யோசனையை என்றார்கள். “வண்டியின் டயரில் உள்ள காற்றை குறைத்து முயற்சி செய்து பாருங்கள்” என்றான்.

சிறுவனுக்கு கரும்புடன் பாராட்டுகளும் கிடைத்தது. வண்டி பாலத்தை கடந்தது பின்பு காற்று நிரப்பப்பட்டு ஆலையை நோக்கி பயணப்பட்டது.

3 comments:

Riyas said...

Nice photos..

சசிகலா said...

அருமை கண்ணைக்கவர்ந்தது

குடிமகன் said...

@Riyas - thank you
@sasikala - thank you

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!