காட்டுப்பூச்சி. மழை மீது பயங்கர கடுப்பில் இருந்தான். மழைபெய்தா சந்தோஷப்பட இவன் கிராமத்து விவசாயியா என்ன? மழைபெய்தால் பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து விட்டு கேழே பாதாள சாக்கடை இருக்க கூடாது என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே தாண்டித்தாண்டி செல்லும் ஒரு சென்னைவாசி. காட்டுப்பூச்சி பதையாத்திரியாக இவ்வளவு கஷ்ட்டப் பட்டாலும். தான் பேருந்தில் போகும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காகவும், இந்த குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்ய சுங்கவரி கட்டி காரில் சொகுசுப் பயணம் செய்பவர்களுகாகவும் பரிதாபப்படுவான்.
காட்டுப்பூச்சி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை படித்தான். அதன் சுட்டி
பி.டபிள்யூ.சி. டேவிதார் புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கபட்டார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சொன்னார் “மழைநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்க்கு குடியிருப்போர்களின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் அந்தந்த பகுதிமக்களுக்குதான் தங்கள் பகுதியை பற்றி நன்றாக தெரியும்“ என்றார். இதற்காகவே சென்னை மாநகராட்சி ஒரு மினஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது. stopflooding@chennaicorporation.gov.in இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். உங்கள் ஆலோசனைகளை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக படமாக வரைந்து அனுப்பினால், பரிசீலனை செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும். டிசம்பர் 16குள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பவேண்டும்.
காட்டுப்பூச்சி இந்தத்தகவலை படித்தவுடன் தன் பகுதிக்கான தீர்வை பகுதிமக்களுடன் கலந்தாலோசிக்க தொடங்கிவிட்டான்.
நாமும் சொல்லாமே ஆலோசனை?
12 comments:
புதுமையான முறையில் செய்திப்பகிர்வு!நன்று.
@சென்னை பித்தன்-தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!!
நல்ல செய்தி... பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
@ராஜா MVS- தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
நல்ல சமூக அக்கறை பதிவு நண்பா.
படங்கள் அருமை??? நீங்களா எடுத்தீங்க??? என்னப்பா இது!!! ரோட்டில் தண்ணீர் நிக்கா?? அல்லது தண்ணிக்கு நடுவில் ரோட்டு போட்டு இருக்காங்களா??? ஒண்ணுமே புரியல்லையே.... அவ்வ்வ்வ்
@துஷ்யந்தன் – படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை... இங்க ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை அழித்து வீடு, ரோடு எல்லாம் போடுவாங்க அதான் இப்பிடி..
அருமை. பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
சென்னை கார்பொரேஷன் பகுதி மக்களுக்கு சரி. அடுக்கு மாடிக் கட்டிடங்களாக எழும்பியுள்ள புற நகர் பகுதியில் சாலைகளே இடப்படவில்லையே. உ-ம்சென்னை மொகப்பேர் அருகிலுள்ள நொளம்பூர். நூற்றுக் கணக்கில் குடியிருப்புகள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியான சாலைகள் ஏதுமில்லை.
@ திண்டுக்கல் தனபாலன் -தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்..
G.M Balasubramaniam – தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஐயா, இங்கு பிரச்னை மழைநீர் வடியாமல் இருப்பதுதான், அதற்குதான் பொதுமக்களின் உதவியை மாநகராட்சி நாடுகிறது..
மேலும், அப்பகுதிமக்களுக்கு பாதாளசாக்கடை, சாலைகள் அமைத்து தரவேண்டியது மாநகராட்சி கடமைதான் அதை நான் மறுக்கவில்லை..
Hi i am JBD From JBD
Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com
Post a Comment
மனசுல பட்டத சொல்லிடுங்க!