ஒய் திஸ் கொலவெறி? இந்த கேள்வி கொல்கத்தா வெற்றி பெற்றதை கொண்டாடாமல்,
சென்னை தோற்றத்தை கொண்டாடிய ஆங்கில ஊடகங்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும்.
இதே மன நிலையில் பெரும்பாலான இந்தியர்கள் இருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதனை
சென்னை ஒரு தென் இந்திய அதுவும் தமிழகத்து அணி என்பதால், வட இந்திய ஊடகங்கள் இப்படி
நடந்துகொண்டன என்று நினைப்பவர்கள் நிச்சயம் பகைமை விரும்பிகள் தான். ஒருவேளை
மகாராஷ்டிராவில் உள்ளதைப்போல தமிழகத்தில் இரு அணிகள் இருந்து கோவையும் சென்னையும்
இறுதியாட்டத்தில் மோதியிருந்தால் கூட ஒட்டுமொத்த இந்தியாவும் சென்னைக்கு எதிராக
திரும்பியிருக்கும். காரணம் நம் எல்லோரிடத்திலும் உள்ள ஒரு குரூரன் தான்.
·
கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் சென்னையின் ஆதிக்கம்
·
இந்த(பொதுவாகவே) லீக் போட்டிகளில் பெரிய அளவில் பிரமாத படுத்தவில்லை ஆனாலும்
இறுதி போட்டியில் விளையாடும் அணி
·
நடந்த ஐந்து போட்டித்தொடரில் நான்கில் இறுதியில் விளையாடிய அணி.
இவை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த நம்மிலுள்ள குரூரன் சென்னைக்கு
எதிராக திரும்பி விடுகிறான். சென்னை மற்ற அணிகளின் தயவால், அதிர்ஷ்டதின் தயவால் வெற்றிபெறும் ஒரு அணி என்ற நிலைபாட்டுக்கு வந்துவிடுகிறான் குரூரன்.
முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சென்னை அணியின் திறமையை ஒரு பொருட்டாக
கருதாமல், லீக் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும்
அணிதான் திறமையான அணி என்று கருதுகிறான் நம் குரூரன். அதே முதல் இடத்தை பிடிக்கும்
அணி முக்கிய போட்டிகளில் சொதப்பும்போது, அதிர்ஷ்டமில்லை என கருதுகிறான். நம்ம அணி,
நம்ம ஊர் அணி என்ற பிணைப்பு எண்ணங்கள் மேலோங்கி இருப்பதால் சென்னை அணியை நேசிப்பவர்களிடதிலும்,
தமிழக மக்களிடமும் இந்த குரூரன் வெளிப்படிருக்க வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பத்து ஆண்டுகள் வென்று கொண்டிருக்கும்போது,
ஆஸ்திரேலிய அல்லாத அனைத்து நாட்டு கிரிகெட் ரசிகர்களும் தம்முடைய அணி தோற்றாலும்
பரவாயில்லை, ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற கூடாது என்று நினைத்தனர். அந்த
எராளமான புன்னியவான்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக செயல்படும் ஒரு குழுவில் ஒருவனின் செயல்பாடு
மட்டும் மிகச்சிறந்ததாக இருப்பின், அவனை கவிழ்க்க சதி வலை பின்னப்படும் யதார்த்தம்
தான் உள்ளது. டெஸ்ட் அணியை தலைமை தாங்க தோனிக்கு தகுதி இல்லையாம், காம்பீர் தலைமை ஏற்க
போகிறாராம். காம்பீர் தம்பி.....! நீங்க நல்லா வருவிங்க! வாழ்த்துக்கள்!!!
கொல்கத்தா வெற்றி பெற்றதை கொண்டாடாமல்,
சென்னை தோற்றத்தை கொண்டாடிய அனைவருக்கும் எனது கடுமையான கண்டனங்களை இங்கு பதிவு
செய்கிறேன். இது கொல்கத்தாவின் உழைப்பு மற்றும் திறமையை அவமானப் படுத்துவதாகும். தானே
தலைவர் கங்குலி அணியில் இல்லாமல் போனது தனிப்பட்ட முறையில் கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும்
வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எனது வாழ்த்துக்கள்!!
படித்ததில் பிடித்த குட்டி கதை
ஒரு பெண்மணி தனது வீட்டு வாயிலில் உள்ள திண்ணையில் நீண்ட தாடி வைத்த மூன்று
பெரியவர்கள் அமர்த்திருப்பதை கவனித்தவள், அருகே சென்று “ஐயா உங்களை அடையாளம் கொண்டுகொள்ள
முடியவில்லை. பார்த்தல் பசியுடன் இருப்பதை போல தெரிகிறது உள்ளே வாருங்கள்
சாப்பிடலாம்” என்றாள்.
ஒரு பெரியவர் “உங்கள் கணவர் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
“இப்பொழுது இல்லை, இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்” என்றாள்.
“உன் கணவர் இல்லாத நேரத்தில் நாங்கள் உள்ளே வர முடியாது, கணவர்
வந்தவுடன் சாப்பிட வருகிறோம்” என்றார் அந்த பெரியவர்.
சிறிது நேரத்தில் அவளுடைய கணவன், வீட்டுக்கு வந்தான். அவள் கணவனிடம்
நடந்ததை கூறினாள். கணவன் அவர்களை அழைத்து சாப்பிட வை என்றான்.
திண்ணைக்கு சென்று தன் கணவன் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறி, சாப்பிட
அழைப்பு விடுத்தாள்.
“நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் வர முடியாது” என்றார்.
அவள் திகைத்து ஏன் என்றாள்.
“என்பெயர் செல்வம்” மற்ற இவர்களையும் காட்டி இவர் வெற்றி அவர் அன்பு என்ற
அந்த பெரியவர் எங்களில் ஒருவரைத்தான் விருந்துக்கு அழைக்க முடியும் என்றார்.
“உன் கணவனிடம் கலந்தாலோசித்து எங்களில் யாரை அழைக்கிறாய் என்று கூறு” என்றார்
அந்த பெரியவர்.
உள்ளே சென்று நடந்தை கூறியவள், செல்வத்தை அழைக்கலாம் என்றாள் கணவனோ
வெற்றியை அழைத்தால், பேரும் புகழும் கிடைக்கும் என்றான்.
வாக்கு வாதத்தை அமைதியாக கவனித்துகொண்டிருந்த சிறுமியான அவர்களுடைய
செல்ல மகள் அன்பை அழைக்கலாம், வீடு அன்பால் நிறையட்டும் என்றாள்.
தங்களுடைய வாக்கு வாதத்தை நிறுத்திவிட்டு, மகள் யோசனை படி அன்பை
அழைக்க முடிவெடுத்தனர்.
பெரியவர்களை நோக்கி “உங்களில் யார் அன்பு என்றாள்?” அன்பை
விருந்துக்கு அழைக்கிறேன் என்றாள்.
அன்பை தொடர்ந்து, செல்வமும் வெற்றியும் வீட்டிற்கு வந்தனர். திகைத்து
நின்ற அந்த பெண்மணியை பார்த்து.
”என்னையோ அல்லது செல்வதையோ
அழைத்திருந்தால் மற்ற இருவரும் வந்திருக்க மாட்டோம், அன்பு இருக்கும் இடத்தில்
தான் நாங்களும் இருப்போம்” என்று சொன்னார் வெற்றி.